தற்போது தமிழகத்தில் பலரையும் அச்சுறுத்தி வரும் கொரானோநோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு தினமும் நமக்கு அருலிருப்பவர்கள் திடீரென்று இறப்பது பெரும் சோகத்தையும்,வேதனையையும் ஏற்படுத்திவருகிறது.இதனை கருத்தில் கொண்டு அனைவரும் பத்திரமாக, பாதுகாப்பாக இருங்கள்.வெளியில் வரவேண்டாம் என புவனகிரி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளருமான அருண்மொழித்தேவன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது
தமிழகத்தில் கொரானோ நோய் தொற்று காரணமாக இதுவரை இல்லாத அளவிற்கு நம்மைச் சுற்றி பல உயிரிழப்புகள் நாள் தோறும் ஏற்பட்டு வருகின்றன. அண்ணன் தம்பிகளாக பழகியவர்கள் மறைவுக்கு கூட நாம் போக முடியாத மோசமான நிலைமை. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சிக்காலததில் கொரனோ நிவாரணப் பணிகளுக்காகவும், நோய் தடுப்பு பணிகளுக்காகவும் ஒவ்வொரு மாவட்ட தலைநகரதிற்கும் நேரில் சென்று சிறப்பாக செயல்பட்டு மக்களின்நலனை காத்தார்.இது அனைவருக்கும் தெரியும்.
ஆனால் தற்போதைய நிலைமை மிக அதிகமாக கொரானோ பலருக்கும் பரவி வருகிறது. அரசால் நோய் தொற்று உள்ளவர்களுக்கு தேவைப்படும் ஆக்ஸிஜன் படுக்கைகள் வழங்கி சிகிச்சை அளிக்க இயலாத நிலை உள்ளது.இதனால் பலரும் சிரமப்பட்டு வருகிறார்கள். இது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் தொற்று உள்ளவர்கள் ஆம்புலன்ஸிலேயே காத்திருக்கும் நிலை. ரெம்டிசிவர் மருந்து வாங்க கண்ணீருடன் மக்கள் அலைவது மிக்க வேதனையானது. நோய் தொற்று அதிகமானதால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை. இதுவரை இல்லாத அளவிற்கு உயிரிழப்புகள் தினசரி ஏற்பட்டுக்கொண்டுள்ளன.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் நம்மை நாமே காத்துக்கொள்ள அனைத்து பாதுகாப்பு முறைகளையும் நாம் கையாள வேண்டும். கண்டிப்பாக கொரானோ தடுப்பூசி அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும். அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. கண்டிப்பாக எந்நேரமும் முக கவசம் அணிய வேண்டும். அடிக்கடி கை,கால்களை சோப்புப் போட்டு கழுவ வேண்டும். கொரானோ அறிகுறிகள் ஏதேனும் தெரிந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்று சிகிச்சை பெற வேண்டும்.
எனவே மத்திய, மாநில அரசுகள் கூறுவதைக் கேட்டு கட்டுப்பாட்டுடன், பாதுகாப்புடன் நாம் இருந்தால் மட்டுமே இக் கொடிய நோயில் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும் என அன்புடன் வேண்டி கேட்டுக் கொள்கிறேன் என புவனகிரி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக கடலூர் மேற்குமாவட்ட செயலாளருமான அருண்மொழித்தேவன் தனது அறிக்கையில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.
--
No comments:
Post a Comment