உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Friday, May 7, 2021

தெருவில் வழிந்தோடும் சாக்கடை அதிகாரிகளின் அலட்சியத்தால் பொதுமக்கள் அவதி


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது கானூர் கிராமம்.இக்கிராமத்தில் ஆயிரத்திற்கு மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இவ்வாறான நிலையில் கானூர் கிராமத்தில் ஸ்ரீமுஷ்ணம்&சேத்தியாத்தோப்பு  சாலையோரம் செல்லும் செட்டியார் தெருவில் மக்கள் நடப்பதற்காக முன்பு பயன்பட்டது. பல்வேறு வாகனங்களும் செல்லும்படி இருந்தன.இவ்வாறான சூழலில் இந்த தெரு தற்போது அப்பகுதியிலுள்ள குடும்பங்களிலிருந்து வெளியேறும் கழிவுநீரால் சாக்கடையாக மாறிப்போய் தொற்றுநோய் ஏற்படும் விதத்திலும், கொசுத்தொல்லையையும் ஏற்படுத்தி வருகிறது.இதைவிட முக்கியமான விஷயமாக இந்த சாக்கடையானது முக்கிய போக்குவரத்து சாலையில் வழிந்தோடி அதனைக்கடப்பவர்களுக்கு பெரும் சிரமத்தையும்,துயரத்தையும் ஏற்படுத்தி வருகிறது.சாலையின் ஓரம் உள்ள கடைக்காரர்கள்,குடும்பத்தினர் என பலரும் பெரும் அவஸ்தையடைந்து வருகிறார்கள்.இந்த சாக்கடையை தடைசெய்து  மீண்டும் அதனை தெருவாக மாற்றி, தெருவில் மக்கள் நடமாட்டத்திற்கு பயன்படவேண்டும் என ஸ்ரீமுஷ்ணம் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அதிகாரிகள்,நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுக்கப்பட்டும் அவர்கள் இதுவரை வந்து பார்க்கவில்லை.இதற்கு நிரந்தர தீர்வினையும் எட்டப்பட்வில்லை எனவும் கானூர் பகுதி மக்கள் தெரிவித்து  வருகிறார்கள்.இதற்கு அதிகாரிகள் உடனடியாக நிரந்தர தீர்வினை எட்டப்படாவிட்டால் அரசு மற்றும் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க போராட்டம் நடத்தவுள்ளதாகவும் அவர்கள் வேதனையோடு தெரிவித்தனர்.

No comments:

Post a Comment