கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் வணிகர் சங்க மாநில தலைவர் த.வெள்ளையன் அறிவுறுத்தலின்பேரில் மே மாதம்-5ந்தேதி வணிகர் தினம் கொண்டாடப்பட்டது.அதன் தொடர்ச்சியாக வணிகர் தினவிழா தமிழகத்திலுள்ள அனைத்து வணிகர்களாலும் தொடர்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் இதனை முன்னிட்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் முக கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சேத்தியாத்தோப்பு அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் சேத்தியாத்தோப்பு அனைத்து வியாபாரிகள் சங்கத்தலைவர் மகாராஜன் தலைமை வகித்தார்.துணைத்தலைவர் கருணாநிதி,கிட்டு,சௌந்தரராஜன்,செங்குட்டுவன்,டாக்டர் பரணிதரன்
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வணிகர்கள் சங்க மாநில இணைச்செயலாளர் மணிமாறன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம், ஆர்சனிகம் ஆல்பம்30 வழங்கி சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளர் மைக்கேல் இருதயராஜ், உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் ஆகியோர் வணிகர்தின விழாகொண்டாட்டத்தை துவக்கி வைத்தனர்.பின்னர்
பொதுமக்களுக்கு கொரோனோ நோய்த்தொற்றை தவிர்க்கவும் முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் தங்களை தாங்களே தற்காத்துக் கொள்ளவும் உடல் ஆரோக்கியம் பெறவும் பல்வேறு ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் வழங்கினர். நிகழ்ச்சியில் ஏராளமான வணிகர்கள் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் மேலும் அனைத்து வியாபாரிகள் சங்கம் ஆனந்தன்,பாலமுருகன்,அன்பழகன், உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...
No comments:
Post a Comment