உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Saturday, May 1, 2021

புவனகிரி அருகே சி.ஆலம்பாடி பாசன வாய்க்கால் புதிய பாலத்தின் பணிகளை குறிஞ்சிப்பாடி கோட்ட பொறியாளர் ஆய்வு. தரமான பாலம் அமைக்கவும் மற்றும் பணிகளை விரைந்து முடிக்க அவர் கோரிக்கை





கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ளது சி ஆலம்பாடி கிராமம். இந்த கிராமத்தில் புவனகிரி&மருதூர் சாலையில் உள்ள பழைய பாலம் இடிக்கப்பட்டு புதிய பாலம் கட்டும் பணி துவக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் சிஆர்ஐடிபி திட்டத்தில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த பாலம அமைய உள்ளது. இந்நிலையில் இந்த பாலத்தின் கட்டுமான மற்றும் அமைவிட பணிகளை குறிஞ்சிப்பாடி கோட்ட பொறியாளர் சிவசேனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பாலம் அமைய உள்ள இடத்தின் தன்மை மற்றும் வரைபடத்தில் உள்ளதுபோல் பணிகள் துவக்கப்படுகிறதா என பலவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்த அவர் பாலத்தினை தரமாக அமைத்து விரைவாக பணிகளை நிறைவு செய்திட வேண்டும் என அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது குறிஞ்சிப்பாடி உதவிக்கோட்டப்பொறியாளர் சந்தோஷ்குமார்,உதவிப்பொறியாளர் விமல், ஒப்பந்ததாரர்  உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.இந்த பாலமானது புவனகிரி-மருதூர் சாலையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த போக்குவரத்து நிறைந்த பாலம் ஆகும். இதனை தரமாக அமைத்திட வேண்டும் என இப்பகுதி கிராம மக்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை வைத்து வந்தனர்.அதன்படி தற்போது பாலம் கட்டுமானப் பணி துவக்கப்பட்டுள்ளது.இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து அதிகாரிகளுக்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment