Friday, May 14, 2021
பாசன மதகு உடைந்ததால் ஆயிரம் ஏக்கருக்கு மேல் குறுவை நடவு பணிகளை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் வேதனை
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ளது சொக்கன்கொல்லை கிராமம். இந்த கிராமத்தில் உள்ள சொக்கன்கொல்லை ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் நண்டுஓடை வழியாக அப்பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசனத்திற்கு பயன்பட்டு வருகிறது. இந்நிலையில் நண்டு ஓடையில் அமைக்கப்பட்டுள்ள ஐந்து கண் மதகு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த நண்டு ஓடையில் வரும் தண்ணீர் தடுக்கப்பட்டு ஐந்து கண் மதகு மூலம் அப்பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய விளை நிலங்களுக்கு பாசனத்திற்கு பயன்பட்டு வந்தது.இதனை நம்பி அப்பகுதி விவசாயிகள் எப்போதும் நடவு பணிகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக இந்த ஐந்து கண் மதகு முற்றிலும் சேதமடைந்து உடைந்து விழுந்தது. இதனால் இந்த நண்டு ஓடையில் வரும் தண்ணீரானது பயனற்று கடலில் வீணாக சென்று கலக்கிறது. இது குறித்து கவலை அடைந்துள்ள விவசாயிகள் நண்டு ஓடை 5 கண் மதகை சரி செய்ய வேண்டும் என்று பொதுப்பணித்துறை, வட்டார வளர்ச்சி அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் என பலரிடம் மனு கொடுத்தும் இதுவரை அதிகாரிகள் வந்து ஆய்வு செய்யவில்லை எனவும், விரைந்து இந்த சேதமடைந்த ஐந்து கன் மதகை அகற்றிவிட்டு புதிய மதகு அமைத்திட வேண்டும். அப்போதுதான் தற்போதைய குறுவை நடுவு பணியை துவக்க முடியும் என அவர்கள் அதிகாரிகளுக்கு வேதனையுடன் கோரிக்கை வைத்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...
No comments:
Post a Comment