உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Friday, May 14, 2021

கொரோன விதிமுறை மற்றும் தடையை மீறி செயல்பட்ட ஜவுளி கடைக்கு புவனகிரி வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்தனர்

 





கடலூர் மாவட்டம் புவனகிரி அருகில் உளள கீழ் புவனகிரி சௌராஷ்டிரா தெருவில் ஜவுளிக்கடை தடையை மீறி இயங்கி வருவதாக புவனகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து விரைந்து சென்ற புவனகிரி காவல் ஆய்வாளர் ராபின்சன் தலைமையிலான போலீசார சௌராஷ்டிரா தெருவில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அருகிலுள்ள வீட்டினுள்ளே பட்டுப் புடவைகள் மற்றும் பல்வேறு துணிமணிகள் வைத்து வியாபாரம் நடைபெற்று வருவதை அறிந்தனர். கொரானோ நோய்தொற்றை ஏற்படுத்தும் விதத்தில் அரசு உத்தரவை மீறும் விதத்தில் இயங்கி வந்தது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது தடை உத்தரவை மீறி இயங்கிவந்த பவானி சில்க்ஸ் ஜவுளி கடைக்கு ரூ.5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. உடனடியாக புவனகிரி வட்டாட்சியர் அன்பழகன், மண்டல வட்டாட்சியர் பிரகாஷ் மற்றும் வருவாய் துறையினர் அனுமதியின்றி தடை உத்தரவை மீறி இயங்கிவந்த ஜவுளி கடைக்கு சீல் வைத்தனர். மேலும் கொரானோ நோய் தொற்று ஏற்படுவதற்கு செயல்பட்ட ஜவுளிக் கடை உரிமையாளருக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தனர்.

No comments:

Post a Comment