உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Saturday, May 15, 2021

சேத்தியாத்தோப்பு,புவனகிரி பகுதியில் போலீசாரின் வாகன சோதனையில் தடை உத்தரவை மீறி கூட்டம் கூட்டமாக குவிந்த வாகன ஓட்டிகள்

 கொரானோ  நோய் தொற்றை முற்றிலும் தடுக்கும் பொருட்டு ஊரடங்கு உத்தரவில் கடைகள் திறந்திருக்கும் நேரம் (15-05-2021) இன்றிலிருந்து காலை  6:00 மணி முதல் பகல் 12 மணி வரை இருந்ததை இரண்டு மணி நேரம் குறைத்து 10 மணி வரை  நேரம் அனுமதிக்கப்பட்டது.. இந்நிலையில் நேரம் குறைக்கப்பட்ட பிறகு கடைகள் அவசரஅவசரமாக 10 மணிக்கு சாத்தப்பட்டன. இதனை அடுத்து கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு மற்றும் புவனகிரி பகுதியில் சாலைகளில் போலீசார் கடுமையான வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது ஏராளமான வாகன ஓட்டிகள் கும்பல் கும்பலாக வருகை தந்தனர். கொரானோ  நோய்தொற்று ஊரடங்கு
 தடை உத்தரவை மீறி சாலைகளில் வந்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் அனைவருக்கும் சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளர் மைக்கேல்இருதயராஜ் தலைமையிலும்,புவனகிரி பகுதியில் நடைபெற்ற சோதனையில் காவல் ஆய்வாளர் ராபின்சன் தலைமையிலும் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டு அபராதம் மற்றும் வழக்கு பதியப்பட்டது. மருத்துவ மற்றம் அனுமதிக்கப்பட்ட ஆவணங்களுடன் வந்தவர்கள் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். புதிய கடுமையான ஊரடங்கு உத்தரவு அமலாக்கப்பட்ட பிறகும் சாலைகளில் கூட்டம் கூட்டமாக நடமாடிய வாகன ஓட்டிகளை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.





No comments:

Post a Comment