உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Sunday, May 23, 2021

புவனகிரி, கீரப்பாளையம், சேத்தியாத்தோப்பு பகுதிகளில் கிராமப்புற பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதி

தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு அமலாவதையடுத்து நேற்று சனிக்கிழமை , இன்று ஞாயிற்றுக்கிழமை என இரண்டு நாட்கள்  பேருந்துகள் இயக்கப்படும் என அரசு நேற்று அறிவித்தது. இந்த அறிவிப்பானது பெயரளவிலேயே இருந்தது என்பது உண்மை. கடலூர் மாவட்டம் புவனகிரி,கீரப்பாளையம், சேத்தியாதோப்பு நகரங்களில், சிதம்பரம் அரசு பணிமனையில் இருந்து இயக்கப்பட வேண்டிய நகரப் பேருந்துகள் சுமார் 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படவில்லை. இயக்கப்பட்ட ஒன்றிரண்டு பேருந்துகளும் சில குறிப்பிட்ட ஊர்களுக்கு மட்டுமே சென்றன.இதனால் அருகில் உள்ள கிராம பகுதிகளுக்கு செல்லக்கூடிய பொதுமக்கள் மற்றும் வெளியூரிலிருந்து வந்தவர்கள் தங்களது பகுதிகளுக்குச் செல்ல முடியாமல் அவதியுற்றனர்.. இரண்டு மூன்று மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தும் தங்கள் பகுதிக்கு செல்ல வேண்டிய பேருந்துகள் வராததால் பொதுமக்கள் கடும் வேதனைக்கு உள்ளாகினர். சிலர் காலையில் இருந்து மாலை வரை காத்திருந்தும் பேருந்துகள் வராததால் அதிக கட்டணம் கொடுத்து மாற்று வழியாக வாடகை வாகனங்களில் தங்கள் பகுதிக்கு சென்றனர்.


No comments:

Post a Comment