தமிழகத்தில் முழு ஊரடங்கில் காய்கறி கடைகள்,மற்றும் மளிகை கடைகள் இயங்காது எனவும், அதற்கு பதிலாக பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே நடமாடும் காய்கறி மற்றும் மளிகைப்பொருட்கள் கிடைக்கும் என தமிழக அரசுஅறிவித்தது.அதன்படி கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் வட்டார வேளாண்மைத்துறை உதவி வேளாண்மை இயக்குநர் சித்ரா வழிக்காட்டல்படியும் கூட்டுப்பண்ணையத்திட்டம் உழவர் உற்பத்தியாளர்குழுக்கள் மூலம்
கிராமப்புற பகுதிகளுக்கான நடமாடும் காய்கறி மற்றும் மளிகைப்பொருட்கள் விற்கும் வாகனத்தை கீரப்பாளையம் வட்டார துணை வேளாண்மை அலுவலர் கோபி துவக்கி வைத்தார்.அப்போது கிராமப்புற மக்களுக்கு பசுமை மற்றும் சுத்தமான காய்கறி,மளிகைப்பொருட்கள் நியாயமான விலையில் கிடைக்கவேண்டும் என வேளாண்மைதுறை அதிகாரிகளால் அறிவுறுத்தலும் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியின்போது வெங்கடேசன்,புகழேந்தி,சிவக்குமார்,முத்துசரவணன், பயிர் அறுவடை பரிசோதனை அலுவலர் வீராசாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment