உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Sunday, May 23, 2021

திட்டமிடாத தெளிவில்லாத முழு ஊரடங்கு அறிவிப்பால் பொதுமக்கள் அவதி கடைத்தெருக்களில் அதிகரித்த மக்கள் கூட்டம்


தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு 24ஆம் தேதி முடிவடைகிறது. இதனை அடுத்து ஊரடங்கு நீட்டிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் நோய் தொற்றை குறைப்பதற்கு கடுமையான ஊரடங்கு உத்தரவு வேண்டும் என அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் வருகின்ற 24 தேதி முதல் முழு ஊரடங்கு அமலாக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. இதில் சில அனுமதிக்கப்பட்ட கடைகளைத் தவிர எந்த தளர்வுகளும் இருக்காது எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை வெளியான இந்த அறிவிப்பால் வேதனையுற்ற வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் செய்வதறியாது திகைத்தனர். இந்த அறிவிப்பை ஒரு நாளுக்கு முன்னதாகவே வெளியிட்டால் சனி ஞாயிறு இரண்டு நாளும் முழுமையாக கடையை திறந்து வைக்க முடியும் என அவர்கள் தெரிவித்தனர். நாளை தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு வருவதால் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறந்திருக்கும் என்பதால் கடலூர் மாவட்டம் புவனகிரி, சேத்தியாத்தோப்பு, கம்மாபுரம், கங்கைகொண்டான் ஆகிய பகுதிகளில் இன்று கடைத்தெருக்களில் திருவிழாவை காண வந்ததைப்போல மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கூட்டமாக தங்கள் இஷ்டம்போல் வளைய வந்தனர். அனைத்து கடைகளும் திறக்கப்பட்டதால் சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியாகிப்போனது. இதனை கட்டுப்படுத்த வேண்டிய அதிகாரிகளும் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தனர். இவ்வாறு திட்டமிடப்படாத தெளிவில்லாத ஊரடங்கு அறிவிப்பினால் மக்களுக்கு கொரானோ நோய் தொற்று அதிகரிக்குமே தவிர குறையாது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர் .

No comments:

Post a Comment