Saturday, May 1, 2021
சேத்தியாத்தோப்பில் கோவிஷீல்டு தடுப்பூசி முகாம் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்றது
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு சந்தைதோப்பில் அரசுப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு கடலூர் மாவட்ட நிர்வாகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம்,சேத்தியாத்தோப்பு பேரூராட்சி, வணிகர்கள், அரிமா சங்கம் என பலரும் இணைந்து கொரானோ நோய்த்தொற்று ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. நடைபெற்ற நிகழ்ச்சியில் அரிமாசங்க மாவட்ட தலைவர் டாக்டர் மணிமாறன் தலைமை வகித்தார்.துணைத்தலைவர் செங்குட்டுவன், அரிமாசங்க நிர்வாகி அன்பழகன்,சௌந்தரராஜன்,மகாகிருஷ்ணன்,டாக்டர் பரணிதரன்,வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் 45 வயதைக் கடந்தவர்களுக்கு அவர்கள் விருப்பத்தின் பேரில் கோவிஷீல்டு, கோவாக்ஸின் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்பட்டது இதில் வணிகர்கள் அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். ஆண்கள், பெண்கள் என யாரும் அச்சமின்றி வந்து கொரானோ நோய்த்தொற்று தவிர்க்கும் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளை போட்டு கொள்ளலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.இதில் மேலும் கிராமநிர்வாக அலுவலர் ஜெயநிலா,ஆர்ஐ சுபாஷ்,பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கரன்,உதவியாளர் செல்வராஜ்,வணிகர்கள் சங்க தலைவர் மகாராஜன் உள்ளிட்ட பலர் இந்த முகாமில் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...
No comments:
Post a Comment