கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஒன்றியத்தில் துணிசிரமேடு ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியினை அனைத்து வகையிலும் முன்னேற்றம் கண்ட ஊராட்சியாக மாற்றும்பொருட்டு சிதம்பரம் பொதுப்பணித் துறை சார்பில் முன்மாதிரி ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் அதுகுறித்த ஆலோசனை கூட்டம் ஊராட்சியில் நடந்தது. அரசு வேளாண், தோட்டக்கலை, சுகாதாரம் உள்ளிட்ட ஒன்பதுக்கும் மேற்பட்ட துறைகள் மூலம் கிராமங்களில் முகாமிட்டு கிராம பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறும் முயற்சியாக ஆலோசனை கூட்டம் பள்ளி வளாகத்தில் நடந்தது.
ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி செல்வராஜ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஜெயராமன் வரவேற்றார்.முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவகுமார், ராமச்சந்திரன், மாரிமுத்து, பாக்கியராஜ் முன்னிலை வகித்தனர்.சிதம்பரம் பொதுப்பணி துறை உதவிப் பொறியாளர் அய்யன்துரை சிறப்பு விருந்தினராக பங்கேற்று பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். நிகழ்ச்சியில் பாக்கியராஜ், முகிலன், மணிகண்டன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சுந்தர் நன்றி கூறினார்.
Tuesday, December 29, 2020
பொதுப்பணித்துறை சார்பில் முன்மாதிரி ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்ட துணிசிரமேடு ஊராட்சி
Subscribe to:
Post Comments (Atom)
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...
No comments:
Post a Comment