கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சேத்தியாத்தோப்பில் இறந்த விவசாயிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.டெல்லியில் மத்திய அரசின் புதிய வேளாண்மை சட்டத்தை திரும்ப பெறக்கோரி விவசாயிகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.இந்நிலையில் போராட்டத்தின்போது இருபத்தியைந்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் எதிர்பாராமல் இறக்க நேரிட்டது.அவர்களுக்கு தமிழகம் முழுவதும் நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சேத்தியாத்தோப்பில் நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புகுழு சார்பில் இறந்த விவசாயிகளின் திருவுருவப்படத்திற்கு பலரும் மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது.
No comments:
Post a Comment