கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் கடலூர் மேற்கு மாவட்ட பாஜகவின் அணி பிரிவு நிர்வாகிகள் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.கேபிடி திருமணமகாலில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கடலூர் மேற்கு மாவட்ட தலைவரும்,புவனகிரி சட்டமன்ற தொகுதி அமைப்பாளருமான கேபிடி இளஞ்செழியன் தலைமை வகித்தார்.மாவட்ட பொருளாளர் கே.ஆர்.சேகர்,மாவட்ட பார்வையாளர் தேவ சரவணசுந்தரம்,கோட்ட அமைப்பாளர் குணாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக பாஜக மாநில பொதுச்செயலாளர் மற்றும் பெருங்கோட்ட பொறுப்பாளருமான கே.டி.ராகவன் பங்கேற்றார்.கூட்டத்தில் வருகிற 27ந்தேதி சிதம்பரத்தில் நடைபெரும் பாஜகவின் மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான பாஜகவினர் பெருந்திரளாக பங்கேற்கவேண்டும் என அறிவுறுத்தல் வழங்கிய மாநிலபொதுச்செயலாளர் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அரசியல் செய்வதற்காக காங்கிரஸ்சும்,திமுகவும் வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகளை தூண்டிவிட்டு பின்னால் நிற்கின்றன.புதிய வேளாண் சட்டமானது திமுக, காங்கிரஸ்ஸின் முந்தைய தேர்தல் அறிக்கையிலேயே இருக்கிறது.அதைத்தான் மத்திய அரசு கொண்டுவந்தது.தற்போது இவர்கள் போராடுவது விவசாயிகளுக்கு துரோகம் இழைப்பதாக உள்ளது.விவசாயிகளுக்கு நல்லது நடந்துவிடக்கூடாது என்பதில் திமுக வேண்டுமென்றே போராட்டங்களை கையில் எடுக்கிறது.திமுக நடத்தும் போராட்டங்கள் மற்றும் பந்த் போன்றவற்றிற்கு திமுகவினரே ஆதரவு தராவில்லை என்பது எல்லோருக்குமே தெரிந்துள்ளதே என பேசினார்.இந்தக்கூட்டத்தில் மாநில ஓபிசி அணி பொதுச்செயலாளர் சாய்சுரேஷ்,அசோக்பாபு,சந்திராகுணசேகரன்,மாவட்ட துணைத்தலைவர்கள் ஜெயக்குமார்,வெற்றிவேல்,விவேகானந்தன், ஜானகிசுகுமாறன்,சுரேஷ்,ராம்பிரபு,இளஞரணி மருதை,ஓபிசி அணி மாவட்ட தலைவர் நாகராஜ்,மாவட்ட மகளிரணி சுனந்தாசெல்வக்குமார்,கீரை ஒன்றிய தலைவர் ராஜா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.முடிவில் மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேஷ் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment