உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Monday, December 28, 2020

வடிகால் வசதி இல்லாததால் வீட்டினை சூழ்ந்த மழை நீரை வெளியேற்ற கோரிக்கை


 

 

 

 



கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வடக்கு மெயின்ரோடடில் இரண்டாவது வார்டு வடக்கு சென்னிநத்தம் பகுதி உள்ளது.இங்குள்ள காளியம்மன்கோவில் அருகில் மூன்றுக்கு மேற்பட்ட வீடுகளில் கடந்த பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.இப்பகுதி தாழ்வான பகுதியாக இருப்பதால் இங்குள்ள குடும்பத்தினர் சிரமமடைந்து வருகிறார்கள்.ஒவ்வொரு மழையின்போதும் இப்பகுதியில் வீடுகளைச்சுற்றி நான்கு அடிக்குமேல் மழைநீர் சூழ்ந்துகொள்ளும்.அப்போது வீடுகளில் வசிப்போர் சிலபொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு அக்கம்பக்கத்தில் தஞ்சமடைவர்.இந்நிலையில் தற்போதைய கடுமையான மழையின்போது மீண்டும் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்த தண்ணீர் வெளியேற வழியில்லாததால் இங்கு வசித்துள்ளவர்கள் கடந்த ஒருமாதத்திற்கும் மேலாக வெளியிடங்களில் வசித்து வருகிறார்கள்.இன்னும் மழை நீர் வடியாமல் இருப்பதால் வீடுகளினுள் செல்லமுடியவில்லை.இங்கு தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றி, இப்பகுதியில் தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்ககோரி வீடுகளில் குடியிருப்போர் அதிகாரிகளிடத்தில் தெரிவித்தும் இன்னமும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என குறிப்பிடுகின்றனர்.தண்ணீர் தொடர்ந்து வீடுகளில்சூழ்ந்து இருப்பதால் வீடுகளுக்குள் விஷஜந்துக்கள் குடியேறிவிடும் அபாயமும் இருக்கிறது.அதனால் அதிகாரிகள் வி¬ரைந்து வந்து தேங்கிய நீரை வெளியேற்ற நிரந்தர வடிகால் வசதி ஏற்படுத்திட வேண்டும் எனவும், இல்லை என்றால் இந்த மழைநீர் தேங்கும்  பிரச்னை தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கும் என அவர்கள் அதிகாரிகளுக்க கோரிக்கை வைத்தனர். 





No comments:

Post a Comment