உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Tuesday, December 29, 2020

நடப்பு சம்பா நெல் அறுவடை பருவத்தில் விவசாயிகளுக்கு சேத்தியாத்தோப்பு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அழைப்பு



கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் சேத்தியாத்தோப்பு அருகே மிராளூரில் இயங்கி வருகிறது.சகல வசதிகளோடு இயங்கி வரும் இந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை இப்பகுதி விவசாயிகள் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கும் ஆலோசனைக்கூட்டம் பின்னலூரில் உள்ள வீரநாராயணன் வேளாண் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் நடைபெற்றது. கண்காணிப்பாளர் பாரதிராஜா தலைமை வகித்தார்.மேற்பார்வையாளர்கள் தண்டபாணி,அன்புச்செல்வன்,பிரபாகரன்,கிருஷ்ணகுமார்,அமரதீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆலோசனைக்கூட்டத்தில் முன்னோடி விவசாயி மற்றும் விவசாயசங்கத்தலைவர் அகரஆலம்பாடி வேல்முருகன்,வீரநாராயணன் வேளாண் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் நடராஜன்,உரிமம் பெற்ற இடங்களின் ஆய்வாளர் வானதி,கண்காணிப்பாளர் உமா ஆகியோர் பங்கேற்று சம்பா நடவு அறுவடை செய்யவுள்ள விவசாயிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்கள்.மேலும் அவர்கள் கூறும்போது
 விவசாயிகள் நடப்பு சம்பா நெல் அறுவடையின்போது சேத்தியாத்தோப்பு அரசு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை சரியாக பயன்படுத்தி தங்களது நெல்லுக்குரிய அதிக லாபத்தை பெற்றிடவேண்டும்.சரியான எடை,அதற்கேற்ற விலை,நல்ல லாபம்  என கொண்டு அனைத்தும் மிகவிரைவாக செயலாற்றி வரும் சேத்தியாத்தோப்பு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை பயன் விவசாயிகள் தங்களது விவசாயத்தை வெற்றிகரமான  பாதையில் கொண்டுசெல்ல  அவர் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்தார்.இந்த ஆலோசனைக்கூட்டத்தின்போது முன்னோடி விவசாயிகள் மற்றும் ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகள் என பலரும் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment