Monday, December 28, 2020
சேத்தியாத்தோப்பு அருகே மழவராயநல்லூர் கிராமத்தில் பாரமபரிய விவசாயத்தை மீட்டெடுப்போம் கிரியேட் குழுவினரின் நேரடி வயல் ஆய்வு
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது மழவராயநல்லூர் கிராமம்.இக்கிராமத்தை சேர்ந்தவர் பாரம்பரிய விவசாயத்தை செய்து வருபவர் நெல்செல்வம் என்ற விவசாயி.இவர் கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக பதினைந்துக்கும் அதிகமான பாரம்பரிய நெல்ரகங்களான மாப்பிள்ளை சம்பா,ரோஜா சம்பா,கருப்பு கவுனி, சிங்க்கார், சீரக சம்பா உள்ளிட்டவைகளை இயற்கை முறையில் பயிரிட்டு வருகிறார்.இவர் தான் பயிரிடுவதை மதிப்பு கூட்டியும் விற்பனை செய்வதிலும் சிறந்து விளங்கியும் வருகிறார்.இவ்வாறு இவரது பாரம்பரிய விவசாயத்தின்மூலம் கிடைக்கும் அரிசியில் மருத்துவக்குணங்கள் நிறைந்து மனிதர்களின் பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு காலக்கட்டத்தில் உடல்நலக்கோளாறுகளை இயற்கையான முறையில் சரிப்படுத்தக்கூடிய சத்துக்கள் இருக்கின்றன.இதனால் இவரின் பாரம்பரிய விவசாய பொருட்களை தமிழகத்தின் பல இடங்களிலிருந்தும் வருகை தந்து நெல்செல்வத்த்தின் அனுபவங்களை கேட்டறிந்து அவரிடம் பாரம்பரியஅரிசி, விதை நெல்லை இலவசமாக வாங்கியும் செல்கிறார்கள்.இந்நிலையில் இவரது வயலுக்கு பாரம்பரிய நெல்விவசாயத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் கிரியேட் நமது நெல்லை காப்போம் குழுவினர் வருகை தந்து நெல்செல்வத்தின் வயலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.அப்போது வயலில் விளைந்துள்ள நெல் ரகங்கள், அவற்றின் தன்மை, அவைகளின் வளர்ச்சிக்காலம், அவற்றை எவ்வாறு பராமரிப்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை கேட்டறிந்தனர்.இதனையடுத்து மழவராயநல்லூர் கிராமத்தின் ஊராட்சி மன்ற வளாகத்தில் கிரியேட் நமது நெல்லை காப்போம் ,விவசாயிகள் ஆகியோர் இணைந்த கலந்துரையாடல் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் நமது முன்னோர்கள் இருபதாயிரம் வகையான பாரம்பரிய நெல்லை பயன்படுத்தினர்.தற்போது நாம் அவற்றை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்க வேண்டும்.அதனால் ஒவ்வொரு விவசாயியும் குறைந்தளவு ஒரு பாரம்பரிய நெல்ரகத்தை நடவேண்டும்.அதன்மூலம் கிடைக்கும் உணவினை உட்கொள்ளவேண்டும்.இதனால் பாரம்பரிய நெல்ரகத்தை மீட்பதோடு நஞ்சில்லாத உணவுகளும் இந்த உலகிற்கு கிடைக்கும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மழவராயநல்லூர் பாரம்பரிய நெல்விவசாயி நெல்செல்வம் தலைமை வகித்தார்.ஊராட்சி மன்றத்தலைவர் பிருந்தாவதி வரதராஜன் நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.சுற்றுச்சூழல் பாதுகாப்பு பேரவை, வடலூர் நுகர்வோர் உரிமை தலைவர் கோவிகல்விராயர்,நமது நெல்லை காப்போம் மாநில ஒருங்கிணைப்பளர் இரகுநாதன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கிரியேட் அறக்கட்டளை தலைவர் துரைசிங்கம் சிறப்புரையாற்றினார்.கிரியேட் நமது நெல்லைக்காப்போம் வரதராஜன்,திருச்சி குடும்பம்இணை இயக்குநர் சுரேஷ்கண்ணா,நாகப்பட்டினம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஞானசேகரன், வெய்யலூர் ஓய்வுபெற்ற ஆசிரியர் மற்றும் பாரம்பரிய முன்னோடி விவசாயி ராமதாஸ், சேத்தியாத்தோப்பு உழவுக்கரங்கள் வீரத்தமிழன் உள்ளிட்ட விவசாயிகள் பலரும் நிகழச்சியில் கலந்துக்கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...
No comments:
Post a Comment