Tuesday, December 29, 2020
சேத்தியாத்தோப்பு எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தினக்கூலித்தொழிலாளிகள் நிர்வாகத்திடம் நடத்திய பேச்சுவார்த்தை எதிர்பார்த்த பலனை தரவில்லை என்பதால் வெளிநடப்பு செய்தனர்
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் உள்ளது எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலை.இந்த ஆலையில் 130க்குமேற்பட்டவர்கள் 30 ஆண்டுகளாக தினக்கூலித்தொழிலாளிகளாக வேலை செய்து வருகிறார்கள்.இவர்கள் பலமுறை தங்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும் என ஆலையின் மேலாண்மை இயக்குநரிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.இந்நிலையில் நேற்று காலை ஆறுமணிமுதல் ஆலையின் நுழைவாயிலின் முன்பு 130 தினக்கூலித்தொழிலாளிகளும் வேலைநிறுத்த காத்திருக்கும் போராட்டத்தை துவக்கினர்.இவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவையும் தெரிவித்து வரும் நிலையில் இன்று இரண்டாவது நாளாக அவர்களது காத்திருப்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஆலையின் மேலாண்மை இயக்குநர் பொறுப்பு குழந்தைவேலு தலைமையில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களின் சார்பாக பத்துபேர் அடங்கிய குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.அப்போது தொழிலாளர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும் என்பதையே கோரிக்கையாக வலியுறுத்தியாதால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டமுடியாமல் அவர்கள் மேலாண்மை இயக்குநரின் பேச்சுவார்த்தையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...
No comments:
Post a Comment