கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பூந்தோட்டம் கிராமத்தில் உள்ள ராதா என்பவரின் வீடு தீவிபத்தில் எதிர்பாராமல் முழுவதும் எரிந்து சேதமானது.இதனையடுத்து அதிமுக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன் நேரில்சென்று ஆறுதல் கூறி அரிசி,மளிகை,நிதியுதவி உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் கீரப்பாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.பி.கருப்பன், ஒன்றிய கவுன்சிலர் வள்ளிதில்லைமணி,புவனகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் மற்றும் ஒன்றிய பெருந்தலைவருமான சிவப்பிரகாசம்,
மாவட்ட அம்மாபேரவை செயலாளர் உமாமகேஸ்வரன்,அதிமுக நிர்வாகி ஜெயசீலன்,புவனகிரி நகரசெயலாளர் செல்வகுமார்,டேங்க்சண்முகம்,
முன்னாள் ஒன்றியம் செந்தமிழ்செல்வன்,முன்னாள் வங்கி தலைவர்குமார்,வீரமூர்த்தி,கமலக்கண்ணன், கலைச்செல்வன்,ஜெயராமன்,பாலு உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் உடனிருந்தனர்.நிதியுதவியை பெற்றுக்கொண்ட குடும்பத்தினர் தமிழக முதல்வருக்கும், மாவட்ட செயலாளருக்கும் நன்றியை தெரிவித்தனர்.
No comments:
Post a Comment