கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது பெரியநெற்குணம் ஊராட்சி.இந்த ஊராட்சியில் உள்ளவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.ஜல்ஜீவன் மிஷன் திட்டம் 51,80,000 மதிப்பில் பணிகள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் புவனகிரி அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் மற்றும் புவனகிரி ஒன்றிய பெருந்தலைவருமான சி.என்.சிவப்பிரகாசம் தலைமை வகித்து திட்டத்தை பூமிபூஜையோடு துவக்கி வைத்தார்.ஒன்றிய துணைத்தலைவர் வாசுதேவன்,அதிமுக நிர்வாகி ஜெயசீலன்,புவனகிரி தகவல் தொழில்நுட்பபிரிவு மேற்கு ஒன்றிய செயலாளர் சபரிராஜா,ஊராட்சி மன்றத்தலைவர் குணசுந்தரிதேவேந்திரன்,துணைத்தலைவர் வீரமணி மற்றும் அதிமுகவினர் மோகன்,ராமலிங்கம்,ஒன்றிய பொறியாளர் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment