உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Friday, November 6, 2020

வெற்றிவேல் யாத்திரைக்கு தடையை கண்டித்து கண்டண ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற கடலூர் மேற்குமாவட்ட பாஜகவினர் கைது

 


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் வெற்றிவேல் யாத்திரைக்கு தடையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற கடலூர் மேற்குமாவட்ட பாஜகவினர் கைது.தமிழகத்தில் நவம்பர் 6முதல் டிசம்பர் 6வரை வெற்றிவேல் யாத்திரை திருத்தணியிலிருந்து புறப்பட்டு திருச்செந்தூரில் முடிவடையும் என பாஜக அறிவிப்பு செய்திருந்தது.இந்நிலையில் கொரானோ கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டது.இதனையடுத்து  இதனைக்கண்டித்து கடலூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட தலைவர் கேபிடி இளஞ்செழியன் தலைமையில் ஏராளமானவர்கள் சேத்தியாத்தோப்பு ராஜீவ்காந்தி சிலைக்கு அருகில் சென்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.அரசு அனுமதிகொடுக்கவேண்டும் எனவும் அவர்கள் கோஷங்களையும் எழுப்பினர்.அப்போது சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி சுந்தரம், சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளர் ராமதாஸ் எஸ்ஐக்கள் மாணிக்கராஜா,அபுஇபுராகிம்,இளையராஜா,எஸ்பிஏட்டுக்கள் வெங்கடகிருஷணன்,கோவிந்தராஜ் உள்ளிட்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.அப்போது போலீசாருக்கும், பாஜகவினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் அவர்கள் அனைவரையும் கைதுசெய்து வேனில் ஏற்றிச்சென்று தனியார் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர்.இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.இந்த கண்டன ஆர்ப்பாட்த்தின்போது மாவட்ட துணைத்தலைவர்கள் ஜெயக்குமார்,புவனை வெற்றிவேல்,பொதுச்செயலாளர் ராஜேஷ்,மாவட்ட ஓபிசி அணி பொதுச்செயலாளர் சாத்தப்பாடி குமார்,பட்டியல் அணி மாவட்ட தலைவர் சத்யாகொளஞ்சி,பொருளார் சேகர்,மாவட்ட மகளிரணி பழனியம்மாள் கீரை ஒன்றிய தலைவர் ராஜா உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment