உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Tuesday, November 24, 2020

சாதாரண ஏழையை மருத்துவராக்கி அழகு பார்க்கும் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி

 




கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ளது பூதவராயன்பேட்டை கிராமம்.இக்கிராமத்தை சேர்ந்த கண்ணன்&ஆண்டாள் தம்பதிகளின் மூன்றாவது மகளான அகல்யாஸ்ரீ.இவர் புவனகிரி மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்துள்ளார்.பத்தாம் வகுப்பு தேர்வில் 488/500 மதிப்பெண்களும், பனிரெண்டாம் வகுப்பில் 512/600 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.இவ்வாறான சூழலில் மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான நீட்தேர்வினை கடந்தாண்டு எழுதினார்.அப்போது 184 மதிப்பெண்கள் பெற்று தேர்சசி பெற்றார்.ஏழ்மை நிலையில் செலவு செய்தும், அரசுக்கல்லூரியில் இடம் கிடைக்காததாலும் படிக்கமுடியாதநிலை.இருந்தாலும் தனது சிறுவயது மருத்துவக்கனவினை நிஜமாக்க கடுமையாக போராடி இந்தாண்டு மீண்டும் நீட்தேர்வினை எழுதினார்.அதில் 720 மதிப்பெண்களுக்கு 288 மதிப்பெண்கள் எடுத்து வெற்றிபெற்றார்.என்ன செய்வது என தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி வரலாற்று சரித்திர அறிவிப்பினை வெளியிட்டார்.அரசுப்பள்ளியில் படித்து நீட்தேர்வில் வெற்றிபெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதம் உள்ஒதுக்கீடு வழங்கப்படும் மற்றும் மருத்துவ மாணவர்களுக்கான கல்விசெலவு முழுவதையும் தமிழக அரசே ஏற்கும் என்ற அறிவிப்பு அகல்யாஸ்ரீக்கு நம்பிக்கையையும், உற்சாகத்தையும் தந்தது.விவசாயக்குடும்பத்தில் இருந்தும்,பூதவராயன்பேட்டை கிராமத்தில் இருந்தும் முதல்முறையாக மருத்துவம் படிக்கும் மாணவராக அகல்யாஸ்ரீ உருவாகியுள்ளார்.இவருக்கு திருச்சி அரசு கல்லூரியில் மருத்துவம் படிப்பதற்கான இடம் கிடைத்துள்ளது.



இவர் 7.5 இடஒதுக்கீட்டில் 109வது இடத்தினை பெற்றுள்ளார்.இவருடன் இரண்டு சகோதரிகள், ஒருதம்பியும் உள்ளனர்.தந்தை கண்ணன் கூலிவேலை செய்து வருகிறார்.இவர் சிறுவயது முதலே மருத்துவர்கள் பயன்படுத்தும் ஸ்டெதஸ்கோப் கருவிகள் கொண்ட பிளாஸ்டிக் கிப்டை வைத்து விளையாடுவதையே வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.தற்போது அதனை மகிழ்ச்சியோடு நினைவு கூறினார்.இவருக்கு அவர் படித்த புவனகிரி மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.வடலூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரி செல்வராஸ்,பள்ளி தலைமை ஆசிரியர் சரவண ஜான்சிராணி,துணைத்தலைமை ஆசியர் சுரேஷ்,ஆசிரியர்கள்,கல்வியாளர்கள் பெற்றோரர் ஆசிரியர் சங்கத்தினர் இரத்தினசுப்ரமணியன்,ராம்குமார்,பழனியப்பன்,அமுதா,கீரப்பாளையம் ஒன்றிய பெருந்தலைவர் கனிமொழிதேவதாஸ் படையாண்டவர் என அனைவரும் மருத்துவப்படிப்பிற்கு தேர்வாகியுள்ள மாணவி அகல்யாஸ்ரீக்கு மேன்மேலும் அவர் சாதனை படைக்க வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.7.5 சதவீத இடஒதுக்கீட்டில் தேர்வு பெற்ற புவனகிரி மாணவி அகல்யாஸ்ரீ கண்ணீர்மல்க தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.ஏழைகளின் எட்டாத கனவாக இருந்த மருத்துவ படிப்பினை எட்டச்செய்த கல்வியின் கடவுளாக தமிழக அரசு இருந்தும் வருகிறது எனவும் அவர் தெரிவித்தார். 





No comments:

Post a Comment