கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது புதுவிளாகம் கிராமம்.இக்கிராமத்தில் கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக கீரப்பாளையம் கிழக்கு ஒன்றியத்தின் சார்பாக இளைஞர்-இளம்பெண்கள் பாசறை புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.இதில் கீரப்பாளையம் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் விஆர்ஜே விநாயகமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட பாசறை செயலாளர் ரமேஷ், மாவட்ட அம்மாபேரவை செயலாளர் உமாமகேஸ்வரன்,ரவிச்சந்திரன்,மாவட்ட தகவல் தொழில்நுட்பபிரிவு செயலாளர் முத்தமிழ்செல்வன்,வீரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர்பிரவீன் வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக கடலூர் மேற்குமாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன் பங்கேற்று பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாமை துவக்கி வைத்தர்.பின்னர் அவர் பேசுகையில் ஏழை,எளியவர்கள் என அனைத்து தரப்பினரையும் அவர்களது வாழ்வாதாரத்தையும் உயர்த்தி அழகு பார்ப்பது அதிமுக மட்டுமே.அதிமுகவில் எந்த இடத்தில் இருந்தாலும் அவர்காளலும் உயர்ந்த இடத்திற்கு வரமுடியும் என்பது நிஜம்.இளஞர்களும்,இளம்பெண்களும் தங்களை உற்சாகமாக பாசறை முகாமில் பங்கேற்று தங்களை இணைத்துக்கொள்ளவேண்டும்.இதனால் மற்றவர்களுக்கு சேவையாற்றும் வாய்ப்பும் உங்களுக்கு கிடைக்கும்.பலருடைய பாராட்டுக்களும் கிடைத்து வாழ்க்கையின் உன்னத இடத்திற்கு செல்லவும் முடியும் என இளைஞர்&இளம்ªப்ண்களுக்கு அவர் ஊ£க்கப்படுத்தும்விதமாக அவர்பேசினார்.இதில் சுற்றுப்புற பகுதிளைச்சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட இளம்பெண்கள்,இளஞர்கள் தங்களை பாசறையில் இணைத்துக்கொண்டனர்.ஒன்றிய கவுன்சிலர் ஆவின்ராதாகிருஷ்ணன்,ஊராட்சிமன்றத்தலைவர்கள் பாஸ்கர்,கிருஷணராஜ்,அன்பழகன்,பிரகாஷ்,கூட்டுறவு சங்கத்தலைவர் கோதண்டபாணி,அண்ணாராமலிங்கம், பன்னீர்செல்வம்,விஜயகுமார்,தங்கதுரை,செங்குட்டுவன்,சுதாகர்,மாவட்ட பிரதிநிதிதில்லைக்கோவிந்தன்,அருள்பிரகாசம்,செந்தில், மாயகிருஷ்ணன்,சிவலிங்கம்,கணபதி,ரத்தினக்குமார்,மனோகர் உள்ளிட்ட ஏராளமானவர்கள் பாசறைக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...
No comments:
Post a Comment