கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ளது பின்னலூர் கிராமம்.இக்கிராமத்தை சேர்ந்த புகழேந்தியின் மகளான பானுப்பிரியா நீட்தேர்வில் வெற்றிப்பெற்றுள்ளார்.இவர் 116 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.கடந்த செப்டம்பர் 13 அன்று கடலூர்திருப்பாபுலியூர் அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் நீட்தேர்வை எழுதினார்.இதனையடுத்து நீட்தேர்வு முடிவு அக்டோபர் 16 அன்று வெளியானது.அதில் வெற்றிப்பெற்றார்.இவர்
முதல் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை பின்னலூர் அரசுப்பள்ளியிலும், ப்ளஸ்1, ப்ளஸ்2 வகுப்பை கடலூர் மாவட்டம் வடலூர் புதுநகர் அரசுப்பள்ளியிலும் படித்துள்ளார்.மிகவும் ஏழ்மை நிலையில் குடிசை வீட்டில் வசித்து வருகிறார் பானுப்பிரியா. இரண்டாம் வகுப்பில் படிக்கும்போது எதிர்பாராமல் விபத்து ஏற்பட்டு அவரது இடது காலில் எலும்புமுறிவு ஏற்பட்டு தற்போது நடப்பதற்கு சிரமமான நிலையில், மருத்துவ சிகிச்சையோடு வாழ்ந்து வருகிறார்.
இவரது தந்தை புகழேந்திக்கு இவரையும் சேர்த்து மொத்தம் மூன்று பெண்பிள்ளைகள், ஒரு தம்பி. தன்னுடைய நிலையை கருத்தில் கொள்ளலாமல் படிப்பில் ஆர்வத்தோடு படித்து வந்தார் பானுப்பிரியா.தந்தை புகழேந்தி வடலூர் பகுதியில் மின்வாரியத்தில் சாதாரான தொழிலாளியாக பணிசெய்து வருகிறார்.பானுப்பிரியா சிறுவயது முதலே டாக்டராக விருப்பம் இருந்து வந்ததாக தெரிவிக்கும் நிலையில் அரசுப்பள்ளியில் நீட்தேர்வுக்கான இலவச பயிற்ச்சியில் கலந்துக்கொண்டார். தமிழக அரசு நீட் தேர்வு மாணவர்களுக்காக வழங்கிய அனைத்து உதவிகளையும் கொண்டு நீட் தேர்வினை எழுதியதாக தெரிவிக்கிறார்.தனது சக ஆசிரியர்கள் மற்றும் தனது குடும்பத்தினர் தந்த தொடர் உற்சாகத்தினால்தான் இந்த வெற்றியை பெற முடிந்தது என அவர் மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.
தனது இந்த வெற்றிக்கு காரணமான தமிழக அரசுக்கும், கல்வித்துறை அமைச்சருக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.இதையேதான் இவரது தந்தை புகழேந்தியும் தெரிவிக்கிறார்.அரசு வழங்கிய இலவச மடிக்கணிணி தனது மகளுக்கு பெரிதும் உதவியாக இருந்ததாக தெரிவிக்கிறார்.மாணவி பானுப்பிரியா தெரிவிக்கும்போது தனக்கு உதவிய தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கும், மாண்புமிகு தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியைத்தெரிவிக்கிறார்.மேலும் தனது வெற்றிக்கு உதவிய தனது பெற்றோர்,நண்பர்கள்,பள்ளி ஆசிரியர்கள் என பலருக்கும் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறார்.நேரில் சென்று பார்வையிட்டு செய்தியைசேகரித்தபோது தற்போது மாணவி மிகவும் வறுமையான நிலையில் இருந்து வருகிறார்.இவர் நீட்தேர்வில் வெற்றிபெற்ற பின்பு தொடர்ந்து படிப்பதற்கு நல் உள்ளங்களின் உதவிகிடைத்தால் பெரிதும் உதவியாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment