கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது பேரூர் கிராமம்.இக்கிராமத்தில் கலியன் மகன் சம்மந்தம் என்பவர் வசித்து வருகிறார்.இவர் தாட்கோவில் உதவி மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.இவருக்கு தற்போது 64 வயதாகிறது. இவர் 20வயது இளைஞராக இருக்கும்போதே இவருக்கு சர்க்கரை நோய் ஏற்பட்டது.இதனையடுத்து இவர் இறந்துவிடுவோம் என்ற பயத்தில் தனது சம்பாத்தியத்தில் நிலம், மனை, மற்றும் பொருட்கள் என வாங்கி மகன்கள் பெயரில் எழுதி வைத்தார்.இந்நிலையில் இவருடைய முதல்மனைவி உடல்நலமில்லாமல் இறந்துவிட்டார் முதல்திருமணத்தில் இரண்டுமகன்களும், மூன்று பெண்களும் உள்ளனர்.இந்நிலையில் தனது மனநலம் பாதித்த மகளுடன் தனியாக வசித்து வருகிறார்.பல லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை தனது குடும்பத்திற்கே இவர் தந்துவிட்டதால் இப்போது தனது மகன்கள் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், தான் ஒரு நோயாளி என்றும் பாராமல் நேரிலும் மற்றும் மறைமுகமாகவும் பலவிதங்களில் தொல்லை தந்துவருகிறார்கள்.அவர்களிடமிருந்து தன்னை காப்பாற்றும்படியும், தனது சொத்துக்களை மீட்டுத்தரும்படியும்,இல்லை என்றால் தன்னை சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க அனுமதிக்கும்படியும் சேத்தியாத்தோப்பு உட்கோட்ட காவல் கண்காணிப்பளார் சுந்தரத்திடம் மனுகொடுத்தார் சம்மந்தம்.இதனையடுத்து மனுவைபெற்றுக்கொண்ட சேத்தியாத்தோப்பு உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரம் அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவரது உண்ணாவிரதம் இருக்கும் முடிவை மாற்றி அனுப்பி வைத்தார்.மேலும் காவல்துறையினர் விரைந்து தக்க நடவடிக்கை எடுத்து பிரச்னைக்கு தீர்வு காணப்படும் எனவும் நம்பிக்கையளித்தார்.தனக்கு தமிழக முதல்வரும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் உயிர்பிச்சையளித்து காப்பாற்றும்படி கண்ணீர் மல்க கோரிக்கையும் அவர் வைத்துள்ளார்.
No comments:
Post a Comment