கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் பாஜக கடலூர் மேற்கு மாவட்ட செயற்குழு மற்றும் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.கடலூர் மேற்கு மாவட்ட பாஜக அலுவலகம் கேபிடி
திருமண மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடலூர் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கேபிடி இளஞ்செழியன் தலைமை வகித்தார்.கடலூர் மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர்கள் ராஜேஷ்,ஜனகராஜ்,மாவட்ட துணைத்தலைவர் ஜெயக்குமார்,புவனை வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பாஜக மாநில பொதுச்செயலாளர் மற்றும் பெருங்கோட்ட பொறுப்பாளர் கேடி ராகவன் பங்கேற்று கடலூர் மேற்கு மாவட்ட பாஜக தொண்டர்கள் கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து செயல்பட வேண்டிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவதற்கு பாஜக நிர்வாகிகள் உற்சாகமுடன் செயல்பட்டு தமிழகமே திரும்பிபார்க்க கூடிய இமாலய வெற்றியை பெற கடுமையாக இப்போதிலிருந்தே கட்சிப்பணியாற்றவேண்டும் என பல்வேறு கட்சியின் நிர்வாக செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார்.தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் வேளாண்மை சட்டம் விவசாயிகளின் நலன் சார்ந்து கொண்டு வரப்பட்டது.விவசாயிகளுக்கு நல்லது நடக்ககூடாது என்பதற்காக காங்கிரஸ் இரட்டைவேடம் போடுகிறது, திமுக எதிர்க்கிறது.திமுக எதிர்ப்பது எல்லாமே நாட்டுக்கு தேவையான நல்ல விஷயங்களைத்தான் என்பது தொடர்ந்து நாம் பார்த்து வருகிறோம்.நாட்டுக்கு எதெல்லாம் அநீதியோ அதனை திமுக ஆதரித்து வருகிறது.மொழிக்கொள்கையில் திமுக தன்னை திருத்திக்கொள்ளாமல் பிறரைக்குற்றம் சாட்டுகிறது.திமுக ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி கற்றுத்தரப்படாது என ஸ்டாலின் அறிவிப்பாரா? எனவும், கொரானோ நோய்த்தொற்று நடவடிக்கையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.தினசரி குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருகிறது.அதுமட்டும் அல்லாமல் தினசரி அதிகளவு நோய்த்தொற்று பரிசோதனைகள் செய்யப்படுவதாகவும் கேடி ராகவன் தெரிவித்தார். நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட மேலிட மேற்பார்வையாளர் தேவசரவணன்சுந்தரம் மற்றும் கோட்ட அமைப்பு பொதுச் செயலாளர் குணா , மாநில ஓபிசி பொதுச் செயலாளர் சாய்சுரேஷ் மாநில ஓபிசி அணி செயலாளர் சித்ரா மாவட்ட துணைத்தலைவர்கள் நிர்மலா கோசலை, மாவட்ட பொருளாளர் சேகர்,மாநில விவசாய அணி ராமச்சந்திரன்,மாவட்ட கல்வியாளர் பிரிவு துணைத்தலைவர் அகத்தியர் மெய்க்கண்ட தேவன்,மாவட்ட செயலாளர் தியாகு உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், மாநில அணி பிரிவு நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட ஒன்றிய அணி பிரிவு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்...
கீரப்பாளையம் ஒன்றிய தலைவர் ராஜா நன்றியுரை வழங்கினார்.
Friday, October 2, 2020
பாஜக கடலூர் மேற்கு மாவட்ட செயற்குழு கலந்தாய்வுக்கூட்டம் சேத்தியாத்தோப்பில் நடைபெற்றது
Subscribe to:
Post Comments (Atom)
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...
No comments:
Post a Comment