உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Friday, October 9, 2020

200க்கு மேற்பட்ட கிராம மக்கள், விவசாயிகள் பயன்பெறும் தடுப்பணை பணியை விரைந்து துவக்க தமிழக அரசுக்கு கோரிக்கை





கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ளது ஆதிவராகநல்லூர் கிராமம். இக்கிராம வெள்ளாற்றின் பகுதியில் தமிழக அரசு 95 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்டப்படும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதற்கான நிதியையும் ஒதுக்கியது.அதன்படி வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் கடலூர் மாவட்ட நிர்வாகம் தடுப்பணை அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியை துவக்கி அளவீடுகளும் செய்யப்பட்டது. இந்நிலையில் என்ன காரணமோ தெரியாமல் தடுப்பணைக்கட்டும் பணிகள் அப்படியே நின்றுவிட்டன.தடுப்பணை கட்டும் பணியை விரைந்து துவக்காவிட்டால் அதனால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று இப்பகுதியினர் கூறுகின்றார்கள்.இப்பகுதிக்குமேற்கே உள்ள புவனகிரி,கீரப்பாளையம்,ஒரத்தூர்,சாக்காங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வரை இப்போது கடல்நீர் உட்புகுந்து பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.இதனை இப்படியே விட்டால் சிதம்பரம் மற்றும் புவனகிரி தாலுக்காவில் உள்ள பலபகுதிகள் எதிர்காலத்தில் எவ்விதமான பயன்பாட்டுக்கும் இல்லாமல் பாலைவனமாகிவிடும் என சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கிறார்கள். ஆதிவராகநல்லூர் பகுதியில் அமையும் தடுப்பணையால்  
ஆதிவராகநல்லூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள  200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையில் அமையும் தடுப்பணை கட்டும் பணியை விரைந்து துவக்கிட தமிழக அரசுக்கு பல்வேறு கிராம மக்கள் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து கிராம மக்களும் விவசாயிகளும் தெரிவிக்கும்போது பல கிலோ மீட்டர் தூரம் உட்புகுந்து உள்ள பரங்கிப்பேட்டை பகுதி கடல் நீரை தடுக்கும் வகையில் இந்த தடுப்பணை அமையும் என்பதால் தங்களின் வாழ்வாதாரம் காக்கப்படும் என அவர்கள் நம்பிக்கையோடு தெரிவித்தனர்.

No comments:

Post a Comment