உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Monday, October 12, 2020

சேத்தியாத்தோப்பு அருகே வாக்கூர் கிராமத்தில் நெல்லில் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கான ஆலோசனை வழிகாட்டல் கூட்டம்

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது வாக்கூர் கிராமம்.இக்கிராமத்தில் விவசாயிகள் வேளாண்மை பல்கலைக்கழக அதிகாரிகள் கலந்துரையாடி ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.இதில் விருத்ததாசலம் தமிழ்நாடுவேளாண்பல்கலைக்கழகம் மண்டல ஆராய்ச்சி நிலையம்,நீர் நுட்பமையம் கோயம்புத்தூர்,நீர்வள நிலவளதிட்டத்தின்படி நடைபெற்ற நிகழ்ச்சியில் மண்டல ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.வாக்கூர் ஊராட்சி மன்றத்தலைவர் உஷாராணி சிவநேசன்,துணைத்தலைவர் நர்மதா வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையம் உழவியல் உதவிப்பேராசிரியர் முனைவர் அரிசுதன் வரவேற்புரையாற்றினார்.பயிர் இனப்பெருக்கம் மற்றும் பயிர்மரபியல் உதவிப்பேராசிரியர் மகாலிங்கம், உழவியல் உதவிப்பேராசிரியர் முனைவர் அரிசுதன்,உழவியல் உதவிப்பேராசிரியர் பார்த்திபன்,ஆகியோர் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப உரையாற்றினர்.இதில் விவசாயிகள் நெல் நடவில் வழக்கமான நடைமுறைகளை பின்பற்றினால் அதிக நேரவிரயம்,பொருள் செலவு,ஆட்கள் அதிகம் உள்ளிட்ட சிரமங்கள் ஏற்படும்.மற்றும் மகசூலும் கு¬றாவாக கிடைக்கும்.அதனால் விவசாயிகள் வேளாண்மை பல்கலைக்கழக அதிகாரிகள் வழங்கும் நெல்லில் அதிக மகசூல் எடுப்பதற்கான நவீன, மற்றும் எளிய தொழில்நுட்பங்களைப்பற்றிய ஆலோசனைகளை பின்பற்றி செயல்படுத்தினால் நெல்லில் அதிக மகசூல்,அதிக லாபமும் கிடைக்கும் என்றும் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்கள்.முடிவில் இளநிலை ஆராய்ச்சியாளர் மணிக்கண்டன் நிகழ்ச்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கும், ஒத்துழைப்புத்தந்த ஊராட்சி நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்தார்.


No comments:

Post a Comment