கடலூர் மாவட்டம் புவனகிரி அருகேயுள்ளது பூதவராயன் பேட்டை கிராமம். இக்கிராமத்தில் 100 நாள் வேலை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளில் ஏராளமான பெண் தொழிலாளர்கள் பங்கேற்று பணி செய்து வருகிறார்கள். இந்நிலையில் கிராம மக்களுக்கு பெண் குழந்தைகளின் முக்கியத்துவம் குறித்தும், பெண் குழந்தைகளை கவனமுடன் பாதுகாத்து வளர்ப்போம் என்பது பற்றியும் தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புவனகிரி ஊராட்சி ஒன்றிய சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் புஷ்பவல்லி தலைமை வகித்து பெண் குழந்தைகள் முக்கியத்துவம் பற்றியும், பெண் குழந்தையின் சிறப்புகள் பற்றியும், பெண் குழந்தைகளின் சிறப்பான கல்வி அளிப்பது குறித்தும் விளக்கமாக அறிவுறுத்தி பேசினார். இந்நிகழ்ச்சியில் பூதவராயன்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி
பழனிசாமி, பணித்தள பொறுப்பாளர் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர.
No comments:
Post a Comment