கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ளது சி.ஆலம்பாடி கிராமம்.இக்கிராமத்தில் 650 ஏக்கருக்கு மேல் நடப்பு நம்பா பருவததில் நேரடி நெல்விதைப்பினை விவசாயிகள் செய்துள்ளனர்.விதைக்கப்பட்ட நெல்லும் நன்றாக வளர்ந்து பசுமையாக காட்சியளித்தன.இந்நிலையில் கடந்த சில நாட்களாக விடாமல் பருவமழையின் தாக்கத்தினால் தொடர்ச்சியாக கன மழை பெய்து வந்தது.இந்த மழை ஓரளவுக்கு வரம் என்று சொல்லப்பட்டலாலும் அது சி.ஆலம்பாடி கிராம விவசாயிகளுக்கு பெரும் சோதனையும், வேதனையையும் தற்துவிட்டது.ஆம் இப்பகுதியில் நேரடி நெல்விதைப்பு செய்யப்படட வயலில் கடல்போல் மழைநீர் தேங்கி நின்றது.இதனால் நேரடி நெல்விதைப்பு செய்யப்பட்டு சிநாட்களேயான நெல்வயல்களும், அதிலுள்ள நெல்நாற்றும் அழுகிப்போயின.இதனால் விவசாயிகள் அடுத்து எதுவும் செய்ய முடியாமல் கண்ணீருடன் வயல்களில் தண்ணீரை வடியவைக்க முயன்று வருகிறார்கள்.இதுகுறித்து விவசாயிகள் தெரிவிக்கும்போது வழக்கமாக வடகிழக்கு பருவமழைக்காலத்தில் நேரடி நெல்விதைப்பு செய்துள்ள எங்களுக்கு பல்வேறு சிரமமங்கள் மழையால் இருக்கும்.நாங்கள் அதிலிருந்து தப்பிக்க வயலில் தேங்கும் மழைநீரை அருகிலுள்ள முரட்டுவாய்க்காலில் வடிய வைத்து ஓரளவுக்கு பாதிப்பில்லாமல் தப்பித்துக்கொள்வோம்.இந்தாண்டு முரட்டு வாய்க்காலில் தண்ணீர்செல்லும் பாதையெங்கும் அடைப்பு ஏற்பட்டுக்கொண்டு தொடர்ந்து தண்ணீர் செல்ல முடியாத நிலை இருக்கிறது.மேலும் வாய்க்காலில் தேவையற்று திறற்து விடப்பட்ட தண்ணீரும் அதிகளவில் கரைபுரண்டு ஓடுவதால் நெல்வயலில் தேங்கியுள்ள தண்ணீரை வடியவைக்க முடியவில்லை.பொதுப்பணித்துறை அதிகாரிகள் முரட்டு வாய்க்காலினை உரிய நேரத்தில் வாய்க்காலினை தூர்வாரியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.இப்போது இப்பகுதியிலுள்ள விவசாயிகள் அனைவரும் வயலில் தேங்கியுள்ள தண்ணீரை வடிய வைத்துக்கொண்டுள்ளோம்.அதிக கடன் வாங்கி இருந்த காசையெல்லாம் செலவு செய்து நேரடி நெல்விதைப்பு செயதுவிட்டோம்.தற்போது தண்ணீரை வடியவைத்தாலும் திரும்பவும் வயலில் நேரடி நெல்விதைப்புக்கு என்ன செய்யப்போகிறோம் என்று தெரியவில்லை.தமிழக அரசும், அரசு வேளாண்மைத்துறை அதிகாரிகளும் எங்களுக்க தேவையான விதைநெல் மற்றும் தேவையான பல்வேறு உதவிகளை வழங்கினால் பேருதவியாக இருக்கும் என விவசாயிகள் கண்ணீருடன் தமிழக அரசுக்கும், வேளாண்மைத்துறை அதிகாரிகளுக்கும் கோரிக்கை வைத்தனர்.
No comments:
Post a Comment