கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ளது சி.ஆலம்பாடி கிராமம்.இக்கிராமத்தில் சி.ஆலம்பாடி&பு.உடையூர் இணைப்புச்சாலை செல்கிறது.இந்த சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகளாகிறது.இப்பகுதி விவசாயிகள்,கிராமபொதுமக்களின் கோரிக்கை வைத்ததையடுத்து சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.இந்த சாலை இரண்டு கிலோமீட்டர் நீளமுள்ளது.இது மிக முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக உள்ளது.இந்த சாலையில் விவசாயிகளின் உழவு வாகனங்கள், வயலில் விளைந்த வேளாண்பொருட்களை எடுத்து வருவதற்கு செல்லும் வாகனங்கள், மற்றும் சி.ஆலம்பாடி&பு.உடையூர், உளுத்தூர்,அம்பாள்புரம்,தலைக்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமத்தினர் விரைவாகவும், எளிதாகவும் புவனகிரி வருவதற்கு பயன்படுத்தியும் வருகின்றனர்.அதனால் சாலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.இந்நிலையில் சாலை தற்போது பலத்த சேதமடைந்துள்ளது.பல இடங்களில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.சற்று கவனக்குறைவாக சென்றால் இதில் செல்பவர் அருகிலுள்ள முரட்டு வாய்க்காலில் விழுந்துவிட வாய்ப்புண்டு.மேலும் இவ்வழியாக செல்லும் பலரும் மிகுந்த சிரமப்பட்டே செல்கிறார்கள்.இது குறித்து பலரும் தெரிவிக்கையில் இந்த சாலையை அதிகாரிகள் ஆய்வு செய்து தரமான சாலையாக அமைத்து தரவேண்டும்.இப்படியே விட்டுவிட்டால் சில நாட்களில் சாலை இருந்த இடமே தெரியாமல்போய்விடும் எனவும் அவர்கள் தமிழக அரசுக்கும், அதிகாரிகளுக்கும் வேதனையோடு கோரிக்கை வைத்தனர்.
No comments:
Post a Comment