கடலூர் மாவட்டம் புவனகிரியில் கடலூர் மேற்குமாவட்ட பா.ஜ.க., கல்வியாளர் அணி சார்பில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் கல்வியாளர் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் அகத்தியர்மெய்கண்டதேவன் தலைமை வகித்தார்.புவனை ஒன்றிய பொதுச் செயலாளர் ராஜி வரவேற்றார். கல்வியாளர் பிரிவு மாவட்டத்துணைத் தலைவர் சுரேஷ், மாவட்ட செயலர்கள் மகேஸ்வரன்,கல்யாணசுந்தரம், மாவட்ட துணைத் தலைவர்கள் புவனைவெற்றிவேல்,ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர். கடலூர் மேற்கு மாவட்டத் தலைவர் கேபிடி இளஞ்செழியன் சிறப்பு விருந்தினராக வருகை தந்தார்.பின்னர் அவர் கல்வியாளர் பிரிவு அலுவலகத்தை திறந்து வைத்து, மோடி பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். கல்வியாளர் பிரிவு மாநில செயலாளர் சந்திராகுணசேகரன், பொதுவ்செயலர் ராஜேஷ், கல்வியாளர் பிரிவு மாவட்டத் தலைவர் நாகேஸ்வரபாபு சிறப்பு விருந்தினராக பங்கேற்று பாஜக வளர்ச்சி தொடர்பான பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கனகராஜன், கட்சி நிர்வாகிகள் ராமநாதன், புவனை தியாகு, சக்திவேல், கணேசன்,திருக்குமரன்,வேணுகோபால்,பாலுத்தங்கரை சுந்தரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கல்வியாளர் பிரிவு ஒன்றிய தலைவர் தமிழ்க்குமரன் நன்றி கூறினார்.முன்னதாக புவனகிரி நகருக்கு வருகை தந்த பாஜக கடலூர் மேற்கு மாவட்ட தலைவருக்கு நிர்வாகிகள் உற்சாக வரவேற்பளித்தனர்.
No comments:
Post a Comment