கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கீரப்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் இருசக்கர வாகன பழுதுபார்க்கும் கடை மற்றும் சிறு மளிகைகடையும் உள்ளன.இந்நிலையில் இந்தக்கடை எதிர்பாராமல் திடிரென தீப்பிடித்து எரிந்தது.இதில் இருசக்கர வாகன பழுதுபார்க்கும் கடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பத்துக்குமேற்பட்ட வாகனங்கள் முற்றிலும் எரிந்து கருகின.மேலும் அருகிலிருந்த சிறு மளிகைக்கடையின் முகப்பு பகுதியும் தீயில் சேதமடைந்ததது.
இதுகுறித்து இருசக்கர வாகன பழுதுபார்க்கும் கடையின் உரிமையாளர் மணிக்கண்டனர் புவனகிரி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.புகாரின்பேரில் தீவிபத்து ஏற்பட்டதின் காரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.இந்நிலையில் தீவிபத்து குறித்து அறிந்தவுடன் கீரப்பாளையம் ஒன்றிய பெருந்தலைவர் கனிமொழிதேவதாஸ் படையாண்டவர் தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு நிவாரண உதவியையும் வழங்கினார்.
Thursday, September 17, 2020
புவனகிரி அருகே கீரப்பாளையத்தில் நள்ளிரவில் திடிரென தீவிபத்தால் அதிர்ச்சி
Subscribe to:
Post Comments (Atom)
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...
No comments:
Post a Comment