கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் அரசு எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை
ஆலை இயங்கி வருகிறது.இந்த ஆலையின் 2020-21ஆம் ஆண்டின் அரவைப்பருவத்துவக்கநிகழ்வு நடைபெற்றது.அதன்படி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இயந்திரங்கள்இயங்கும் பகுதியில் முதல் ரோலர் பொருத்தும் பணியை ஆலையின் தலைவர் கானூர்பாலசுந்தரம் துவக்கி வைத்தார்.இதனையடுத்து அரவைப்பணிகள் துவக்குவதற்கான
பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.இந்நிகழ்ச்சியில் மேலாளர்முனியம்மாள், தலைமை பொறியாளர் செங்குட்டுவன்,தலைமை ரசாயணர்செல்வேந்திரன்,தொழிலாளர் நலஅலுவலர் பன்னீர்செல்வம், வெங்கடேசன் மற்றும்ஆலையின் பணியாளர்கள் என ஏராளமானவர்கள் உடனிருந்தனர்.விரைவில்அரவைப்பருவம் துவக்கவுள்ளதால் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள்மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment