கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த அரசு மருத்துமனையில் அனைவருக்குமான ஊட்டச்சத்து உணவு எடுத்துக் கொள்ளும் விதமாக போஷான் அபியான் ஊட்டச்சத்து வார விழிப்புணர்வு விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை மருத்துவர் லலிதா தலைமை வகித்து நிகழ்ச்சியை துவக்கினார்.மருத்துவர் வெற்றிவேந்தன்,கொரானோ சிறப்பு மருத்துவர் பரணிதரன்,அரிமாசங்க மாவட்ட தலைவர் மணிமாறன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அவர் தெரிவிக்கும் போது கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட அனைவருமே ஊட்டச்சத்து மிக்க சரிவிகித சிறுதானிய உணவுகளை சரியான விகிதத்தில் எடுத்துக்கொண்டால் உடல் ஆரோக்கியமாகவும், எவ்விதமான உடல்நலக் கோளாறுகளும் இல்லாமலும் இருக்கும் என்று அறிவுரை வழங்கினார்.பின்னர் அரசு மருத்துவ மனை சார்பில் தயாரிக்கப்பட்டு சிறுதானிய ஊட்டச்சத்து உணவுகள் பலருக்கும் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில்
சமூக ஆர்வலர்கள், அரசு மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
Friday, September 25, 2020
சேத்தியாதோப்பு அரசு மருத்துவமனையில் ஊட்டச்சத்து உணவு வார விழா நடைபெற்றது
Subscribe to:
Post Comments (Atom)
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...
No comments:
Post a Comment