உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Friday, September 25, 2020

பாரம்பரிய மிக்க சேத்தியாத்தோப்பு வாரச்சந்தையை தமிழக அரசு திறக்கவேண்டும் என விவசாயிகள்,வியாபாரிகள் கோரிக்கை

 




கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் பாரம்பரியமிக்க 100ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாரச்சந்தை நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இந்த சந்தையானது கடந்த ஆறுமாதங்களுக்கு முன்பு கொரானோ நோய்த்தொற்று ஏற்படாமல் மக்களை காக்க, பொதுமக்களின் நலனை முன்னிட்டு அரசு உத்தரவின்பேரில் அதிகாரிகள் மூடினர்.அன்றிலிருந்து இன்றுவரை சந்தை  செயல்படாமல் இருந்து வருகிறது.இதனால் இப்பகுதி சுற்றியுள்ள ஐம்பதுக்கு மேற்பட்ட கிராம மக்கள்,விவசாயிகள், வியாபாரிகள் என பலரும் போதிய வருவாய் இல்லாமல் சிரமப்பட்டு வருகிறார்கள்.கிராமப்பகுதி விவசாயிகள் சந்தையையே முக்கிய வாழ்வாதரமாக நம்பியிருக்கிறார்கள்.இப்போது தமிழக முதல்வர் ஊரடங்கு உத்தரவிலிருந்த பல்வேறு தளர்வுகளை அறிவித்து செயல்படுத்தி வரும்நிலையில் அதனடிப்படையில் சேத்தியாத்தோப்பு பாரம்பரியமிக்க வாரச்சந்தையை திறந்து,இதனை நம்பியிருக்கும் பலரின் வாழ்வாதாரத்தையும் முதல்வர் காக்கவேண்டும் என சேத்தியாத்தோப்பு அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் இந்த சந்தையை சுற்றியுள்ள விவசாயிகள்,வியாபாரிகள் என பலரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், அதிகாரிகளுக்கும் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment