உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Thursday, September 24, 2020

சேத்தியாத்தோப்பு அருகே மழவராயநல்லூர் கிராமத்தில் பாரம்பரிய நெல் நடவு திருவிழாவில் விவசாயிகள் உற்சாகமாக பங்கேற்பு

 




கடலூர் மாவட்டம்  சேத்தியாத்தோப்பு அருகே மழவராயநல்லூர் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் ஆத்தூர் கிச்சிலி சம்பா, சிங்க்கார், இலுப்பை பூ சம்பா, சீரக வாசனை சம்பா உள்ளிட்ட பதினைந்துக்கும் அதிகமான பாரம்பரிய நெல் ரகங்களை, நடவு செய்யும் நெல் நடவு திருவிழா நடைபெற்றது.விழாவில் பாரம்பரிய நெல்விவசாயி செல்வம் தலைமை வகித்தார்.வடலூர் நுகர்வோர் உரிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பேரவை கல்விராயர், ஜெயங்கொண்டம் இயற்கை விவசாயி மற்றும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சுந்தரேசன்,இயற்கை விவசாயிகள் வெய்யலூர் ராமதாஸ், தமிழரசன்,ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மழவராயநல்லூர் ஊராட்சிமன்றத்தலைவர் பிருந்தாவதி வரதராஜன் வரவேற்புரையாற்றினார்.
மழவராயநல்லூர் கிராம பாராம்பரிய நெல்விவசாயி செல்வம் வயலில் நடைபெற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளராக அண்ணாமலைப்பல்கலைக்கழக வேளாண்புலம் முதல்வர் மணிவண்ணன் வருகை தந்து பாரம்பரிய நெல்ரகம், அதன் பயன், அது எவ்வாறு  மனிதர்களுக்கு நன்மை செய்கிறது என சிறப்புரையாற்றினார்.தொடர்ந்து பேசிய பாரம்பரிய நெல்விவசாயிகள் கூறும்போது மண்வளத்தை பாதுகாக்கவும் மனிதர்களின் உடல்நலத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதிலும் முக்கிய காரணியாக இருப்பது பாரம்பரிய நெல்லும், அதன்மூலம் கிடைக்கும் அரிசியும்தான்.நாம் சிறிய அளவிலாவது முயற்சி செய்து பாரம்பரிய நெல்ரகங்களை பாதுகாக்கவேண்டும்.பாரம்பரிய நெல்லின்மூலம் கிடைக்கும் நஞ்சில்லா உணவினால்தான் இந்த உலகம் நோயற்ற உலகமாகவும் மாறமுடியும் என்று  தங்களது அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டனர். விழாவில் ஏராளமான பாரம்பரிய  விவசாயிகள் பங்கேற்றனர்.நிகழ்ச்சியின் முடிவில் அனைவரும் விவசாயி செல்வத்தின் வயலில் பாரம்பரிய நெல்நாற்றினை நட்டு நெல்நடவு திருவிழாவினை சிறப்பித்தனர்.பாரம்பரிய நெல் விவசாயி நெல்செல்வம் தெரிவிக்கும்போது தமிழக அரசு பாரம்பரிய நெல் ரகங்களை காப்பதற்கும், அதனை பாதுகாத்து வரும் விவசாயிகளுக்கும் அளப்பறிய நன்மைகள் செய்து வருவதாக மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.தலைமை ஆசிரியர் ரீட்டா நன்றியுரை வழங்கினார்.


 

No comments:

Post a Comment