கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ளது ஆதிவராகநல்லூர் ஊராட்சி.இந்த ஊராட்சிக்கு உட்பட்டது தம்பிக்குநல்லான்பட்டினம் கிராமம்.இக்கிராமத்தில் கடந்த எண்பது ஆண்டுகளுக்கு மேலாக இறந்தவர்களை சுடுகாட்டுக்கு எடுத்துசெல்வதில் பாதையில்லாமல் பெரும் சிரமத்தையும் வேதனையும் அடைந்து வந்தனர்.இந்நிலையில் ஆதிவராகநல்லூர் ஊராட்சி மன்றத்தலைவர் ஜோதிநாகலிங்கம் மற்றும் கிராமமுக்கியஸ்தர்கள் மூலம் சுடுகாட்டு விவகாரம் தொடர்பாக தம்பிக்குநல்லான்பட்டினம் கிராமவிவசாயிகளிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.இதனையடுத்து விவசாயிகள் இருபத்துக்குமேற்பட்டவர்கள் ஒன்றிணைந்து சுடுகாட்டுக்கு செல்லும் சாலைக்காக ஐம்பது லட்சரூபாய் மதிப்புள்ள ,500 மீட்டர் நீளமுள்ள விவசாய விளைநிலத்தை தானமாக கொடுத்தனர்.இதன்பின்னர் சுடுகாட்டுக்குசெல்லும் சாலை அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது.எண்பது ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்த பிரச்னைக்கு கிராம விவசாயிகளே சுமூக தீர்வினை எட்டியிருப்பதை அறிந்த கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி தம்பிக்குநல்லான்பட்டின கிராமத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்பு கிராமவிவசாயிகளுக்கும்,ஆதிவராகநல்லூர் ஊராட்சிக்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.
Thursday, September 17, 2020
50 லட்ச ரூபாய் நிலத்தை தானமாக கொடுத்த தம்பிக்குநல்லான்பட்டினம் விவசாயிகளுக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் பாராட்டு
Subscribe to:
Post Comments (Atom)
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...
No comments:
Post a Comment