உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Saturday, September 12, 2020

ஸ்ரீமுஷ்ணத்தில் பாஜக மாவட்ட இளஞரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா


கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் பாஜக மாவட்ட இளஞரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாநடைபெற்றது.இதில் கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் கேபிடி இளஞ்செழியன் தலைமை வகித்தார்.மாவட்ட இளஞரணி தலைவர் மருதை முன்னிலை வகித்தார்.விழாவின் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில இளஞரணி தலைவர் வினோஜ் ப.செல்வம் வருகை தந்தார்.முன்னதாக சிறப்பு விருந்தினர்க்கு கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் கேபிடி இளஞ்செழியன் தலைமையில் சோழத்தரத்தில் வரவேற்பளிக்கப்பட்டது.விழாவில் மாவட்ட இளஞரணி தலைவர் மருதைவின் தொழிற்வளாகத்தில் 80 அடி உயரமான கொடிக்கம்பத்தில் மாநில இளஞரணி தலைவர் வினோஜ் ப.செல்வம், கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் கேபிடி இளஞ்செழியன் ஆகியோர் பாஜக கட்சிக்கொடியேற்றி கல்வெட்டையும், புதிய பாஜக அலுவலகத்தையும் திறந்து வைத்தனர்.


பின்னர்  மாற்றுக்கட்சியிலிருந்து  ஏராளமானவர்கள் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதனையடுத்து மாற்றுத்திறனாளிக்கு மூன்று பேர்க்கு மூன்று சக்கர சைக்கிளும்,மகளிர்க்கு அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும் 10 தையல்மிஷின்களும், சலவைத்தொழிலாளிக்கு இஸ்திரி பெட்டியும்,
ஏழை எளியவர்களுக்கு காப்பீடுகளும்,கல்வி உபகரணங்களும், ஐந்நூறுக்குமேற்பட்டவர்க்கு மரக்கன்றுகளும், வேட்டி,சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் மாநில இளஞரணித்தலைவர்,கடலூர் மேற்குமாவட்ட தலைவர் ஆகியோரால்
வழங்கப்பட்டது.நலத்திட்ட உதவிகளை வழங்கி வைத்து மாநில இளஞரணித்தலைவர் வினோஜ் ப.செல்வம், கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் கேபிடி இளஞ்செழியன் ஆகியோர் சிறப்புரையாற்றி பேசும்போது தமிழகத்தில் பாஜக தனிப்பெருன்மை பெற்று உருவாகி வருகிறது.அது நமது பாரதபிரதமர் மோடியின் சாதனைகளால்தான் மக்கள் அவர்பக்கம் வந்துக்கொண்டுள்ளனர்.அதனால் வருகின்ற சட்டமன்றத்தேர்தலில் பாஜக தமிழகத்தில் தனக்கு என்று அதிக பலத்தோடு வெற்றிநடைபோடும்.நாம் கடுமையாக கட்சிப்பணியாற்றவேண்டும்.தற்போது இன்னும் சில தினங்களில் வருகின்ற பாரதபிரதமரின் பிறந்தநாள் விழாவை பாரதம்போற்றும் விதமாக உற்சாகமாக கொண்டாடவேண்டும்.ஏழை எளியோர்க்கு அவர்களின் கண்ணீரைத்துடைக்கும்படியாக நலத்திட்ட உதவிகள் வழங்கவேண்டும் என்று கட்சியினருக்கு அறிவுறுத்தல்களை  வழங்கினார்.பின்பு செய்தியாளர்களிடம் அவர் தெரிவிக்கையில் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரட்டை வேடத்தை மக்களிடத்தில் தோலுரித்துக்காட்டவேண்டும். புதிய கல்விக் கொள்கையில் அவர்கள்  இரட்டைவேடம் போட்டுவருகிறார்கள். அதனை மக்களுக்கு எடுத்துக்காட்டும் விதமாக பாஜக இளைஞரணி சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் மிகப்பெரிய மௌனப் போராட்டம் நடத்தப்படும். திமுகவைச்சேர்ந்தவர்கள் நடத்தும் பள்ளிகளில் மூன்று மொழிககள் கட்டாயமாக்கப்பட்டும்,ஏழை மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளிகளில் இரண்டு மொழிகளும் இருக்க வேண்டும் என்று அவர்கள் கூறிவருகிறார்கள். இதில் அவர்கள் எப்படி வேஷம்போடுகிறார்கள் என்பதை மக்கள் நன்றாக உணர்ந்துள்ளார்கள்.நீட் தேர்வு எழுதும் மாணவர்களான வருங்கால மருத்துவர்களுக்கு பாஜக இளைஞரணி சார்பாக இலவச வாகன வசதி ஏற்படுத்தித்தரப்பட்டுள்ளது.எனவே நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாஜக சார்பில் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம். படித்தால் உயர்வு என்று பாஜக சொல்கிறநிலையில், நீட் தேர்வு வேண்டாம் என்று திராவிட முன்னேற்ற கழகம் கூறி, படிக்கும் தமிழக மாணவர்களை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.

 


 இதனை புரிய வைப்பதற்காக இளைஞரணி சார்பாக தொடர்ச்சியாக மௌனப்போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.தொடர்ந்து அவர் நீட்தேர்வு பயத்தினால் மாணவர்கள் இறந்து வருவது குறித்து செய்தியாளர்கள் கேட்டகேள்விக்கு அவர் தெரிவிக்கும்போது மாணவர்கள் அவ்வாறான தவறான முடிவுக்கு செல்லக்கூடாது.வாழ்க்கையில் நீட் தேர்வு என்பது முடிவானது அல்ல.மாணவர்களுக்கு போதுமான கவுன்சிலிங் தருவதற்கு நாங்கள் ஏற்பாடுகள் செய்திருக்கிறோம்.இதுபோல் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்த பிறகு கூட மாணவர்கள் எதிர்பாராமல் இறப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.அதனால் வேதனையான இச்சம்பவங்களை மாற்றும்விதமாக பாஜக மட்டும் அல்லாது பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களுக்கு நல்ல அறிவுரைகளை எடுத்துரைத்திடவேண்டும். தேர்வு என்பதே வாழ்க்கையின் இறுதி கிடையாது.நீட் தேர்வு கொண்டு வந்தது ஏழை மாணவர்களும் மருத்துவராக ஆக வேண்டும். தங்கள் குடும்பத்தினரின் கனவை நினைவாக்க வேண்டும். நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதால்தான் சாதாரண வாட்ச்மேன் மகளும் மற்றும் ரெஸ்டாரென்ட் வேலை செய்பவரின் மகனும்  மருத்துவராக ஆக முடிந்தது. என்றும், மாணவர்கள் நீட் தேர்வில் எப்படி வெற்றி பெற வேண்டும் என்பதை நினைக்க வேண்டுமே தவிர, தற்கொலை என்ற தவறான மோசமான முடிவுகளுக்கு செல்லக்கூடாது. யாரும் எந்த ஒரு மொழியையும் விரும்பி கற்றுக்கொள்ளலாம். இந்தியை படிக்க வேண்டும் சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்று எந்த ஒரு இடத்திலும் மத்திய அரசு கூறியது கிடையாது.ஆனால் இதை மத்திய அரசு கூறுவதாக திராவிட முன்னேற்ற கழகம் ஒரு பொய்க் குற்றச்சாட்டை மக்களிடத்தில் வைக்கிறது.எப்போதெல்லாம் தமிழகத்தில் தேசியமும் தெய்வீகமும் ஓங்குகிறதோ அப்போதெல்லாம் இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பதை திராவிட முன்னேற்ற கழகத்தினர் கையில் எடுத்து வருகிறார்கள்.  நிச்சயமாக இது எடுபடாது. புதிய கல்வி கொள்கையில் மூன்றாவது மொழியாக படிக்கச் சொல்வது எந்த மொழியாக வேண்டுமானாலும்  இருக்கலாம். இந்து என்பது எந்த இடத்திலும் பாஜக சொல்ல வரவில்லை என்பது தான் உண்மை. பாஜகவில் அதிகம் சேர்ந்து வருவது சிறுபான்மையினர் என்றும், இனியும் பாஜக ஒரு மதத்திற்கான கட்சி என்று சாயம் பூச முடியாது. 

 

 


பாஜகவில் இந்துக்கள் இருக்கிறார்கள். ஆனால் எந்த மதத்திற்கும் பாஜக எதிரான கட்சியாக இருந்தது கிடையாது என்று  பாஜக மாநில இளஞரணித்தலைவர், கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் கேபிடி இளஞ்செழியன் ஆகியோர் கூறினர்.இந்நிகழ்ச்சியில் மாநில இளைஞர் அணி துணைத் தலைவர் ரங்கேஷ், மாநில இளைஞர் அணி பொருளாளர் சுரேஷ் கருணா,மாவட்ட மேலிட பார்வையாளர் தேவசரவணசுந்தரம், மாவட்ட துணைத்தலைவர் ஜெயக்குமார்,புவனை வெற்றிவேல்,மாவட்ட பட்டியல் அணி சத்யாகொளஞ்சி,கடலூர் மேற்கு மாவட்ட இளைஞரணி பொருளாளர் சக்திவேல் , ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய தலைவர் ராமலிங்கம், கீரப்பாளையம் ஒன்றிய தலைவர் ராஜா உள்ளிட்ட பாஜக அனைத்து பிரிவு நிர்வாகிகள்,தொண்டர்கள் என ஏராளமானவர்கள் இவ்விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.



No comments:

Post a Comment