கடலூர் மாவட்டம் மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியத்தில் எல்லைக்குடி ஊராட்சி
உள்ளது.இங்கு மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன்(ஜே.ஜே,எம்) பாதுகாக்கப்பட்ட
குடிநீர் வழங்கும் திட்டத்தின் பூமி பூஜை நடைபெற்றது.இத்திட்டத்தின்
மூலம் கிராம மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது.
ரூ.20 லட்சம் மதீப்பீட்டில் நடைபெறும் இப்பணிக்கான பூமி பூஜையை அதிமுக
மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சி.என்.சிவப்பிரகாசம் துவக்கி
வைத்தார்.நிகழ்ச்சியில் எல்லைக்குடி ஊராட்சி மன்றத்தலைவர் ராமலிங்கம்
தலைமை வகித்தார்.ஆதனூர் முன்னாள் ஊராட்சி செயலர் ஜெயசீலன், வட்டார
வளர்ச்சி அதிகாரிகள் சக்தி,பிரேமா, பொறியாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை
வகித்தனர்.மேலும் கூட்டுறவு வங்கித்தலைவர் பிரித்திவ்,பணித்தள
மேற்பார்வையாளர் சகுந்தலாதேவி,சபரி,பிரகாஷ்
உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.ஊராடசித்தலைவர் மாயவன் நன்றி
கூறினார்.இதுபோல் சேத்தியாத்தோப்பு அருகே சின்னநெற்குணம் ஊராட்சியிலும்
இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment