Tuesday, August 11, 2020
தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்எல்ஏ முருகுமாறன் விரைந்து உதவி
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்டது ஸ்ரீமுஷ்னம் மேற்கு ஒன்றியம். இந்த ஒன்றியத்தில் உள்ள சாத்தமங்கலம் கிராமத்தில் திடீர் தீ விபத்தில் தில்லைகோவிந்தன் என்பவரது வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. வீட்டிலுள்ள அனைத்து முக்கிய ஆவணங்களும் தீயில் எரிந்து கருகின.இதனையடுத்து சம்பவம் அறிந்து விரைந்து வந்த அதிமுக கழக அமைப்பு செயலாளரும், காட்டுமன்னார் கோயில் சட்டமன்ற உறுப்பினருமான முருகுமாறன் தீ விபத்தில் வீடு மற்றும் உடமைகளை இழந்த தில்லைகோவிந்தன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் ஸ்ரீமுஷ்ணம் மேற்கு ஒன்றிய செயலாளர் கலியமூர்த்தி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கானூர் பாலசுந்தரம், ஒன்றிய பெருந்தலைவர் லதா ஜெகஜீவன்ராம், மாவட்ட கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன்,மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் குணசேகரன்,ஸ்ரீமுஷ்ணம் நகர செயலாளர் பூமாலைகேசவன், ஒன்றிய துணை பெருந்தலைவர் திருச்செல்வம், அவைத்தலைவர் சின்னப்பன், வழக்கறிஞர் குமார், ஞானம், மோகன், பாஸ்கர் ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள் மற்றும் ராமானுஜம் ஆகியோர் உடனிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...
No comments:
Post a Comment