கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ளது மஞ்சக்கொல்லை ஊராட்சி.இந்த ஊராட்சியில் கொரானோ நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டுள்ளன.அதன்படி ஏற்கெனவே ஊராட்சியின் அனைத்து பகுதிக்கும் கிருமிநாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டுள்ளது.கிராமமக்களுக்கு கபசுரகுடிநீர்,முககவசம்,சானிடைசர் உள்ளிட்டவைகள் ஊராட்சி மன்றத்தின்மூலம் கொடுக்கப்பட்டது.தினமும் பல்வேறு நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு வரும் மஞ்சக்கொல்லை ஊராட்சியில் கொரானோ நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி ஹோமியோபதி மாத்திரை ஆர்சனிகம் ஆல்பம் 30சி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மஞ்சக்கொல்லை ஊராட்சி மன்றத்தலைவர் இராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.சேத்தியாத்தோப்பு ராம்தேவி ஹோமியோபதி கிளினிக் மருத்துவர் பரணிதரன் வருகைதந்து பொதுமக்களுக்கு கொரானோ நோய்த்தொற்று ஏற்படாமல் தவிர்க்கும்படி மனித உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் ஆர்சனிகம் ஆல்பம் 30 சி மாத்திரை குறித்து அதன் நன்மைகள் குறித்தும், அதனை எவ்வாறு உட்கொள்வது என்பது பற்றியும் விரிவாக எடுத்துக்கூறினார்.பின்னர் ஊராட்சியில் உள்ள அனைவருக்கும் வழங்குவதற்காக நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரையை ஊராட்சி மன்றத்தலைவர் இராதாகிருஷ்ணனிடம் மருத்துவர் பரணிதரன் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் ஜான்சிராணிகோவிந்தசாமி,கவுன்சிலர் சீனுவாசன், மஞ்சக்கொல்லை ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் கயல்விழி,மணவாளன்,செல்வி,தங்கமணி,நடராஜ், அமுதா,வீரம்மாள்,கனகசபை, உள்ளிட்ட கிராமமுக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.முடிவில் ஊராட்சி செயலர் சுதாகர் நன்றி கூறினார்.
Thursday, July 9, 2020
புவனகிரி அருகே மஞ்சக்கொல்லை ஊராட்சியில் கொரானோ நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை வழங்கல்

-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த இருபதாண்டுகளுக்கும்மேலாக செயல்பட்டு வருகிறது.சேத்தியாத்தோப்பு,...
-
சேத்தியாத்தோப்பு அருகே வலசக்காடு கிராமத்தில் ஆழ்துளை கிணற்றை மூடிய எஸ்ஐக்கு பொதுமக்கள் பாராட்டு.தமிழகத்தில் மீண்டும் ஒரு துயரமான ஆழ்து...