உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Thursday, July 9, 2020

புவனகிரி அருகே கொளக்குடி ஊராட்சியில் மனித சக்தியால் அழககாக தூர்வாரப்படும் வாரிகால் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி





கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ளது கொளக்குடி ஊராட்சி.இந்த ஊராட்சியில்  வாரிகால் வடிகால் வாய்க்கால் பரவனாற்றில் சென்று இணையும் வடிகால் வாய்க்காலாக உள்ளது.இந்த வாய்க்காலை தூரிட ஊராட்சி மன்றத்தின்மூலம் முடிவெடுக்கப்பட்டது.இதனையடுத்து சுமார் இரண்டுகிலோமீட்டர் நீளமுள்ள வாரிகால் வடிகால் வாய்க்காலை பலர் நவீன முறையில்  ஜேசிபி எந்திரத்தின் மூலம் தூர்வாரலாம் என்று ஆலோசனை சொல்லப்பட்டது.ஆனால் அதனை நிராகரித்து மனித சக்திக்கும், அதன் உழைப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கும்விதமாக தேசிய ஊராக வேலைவாய்ப்புத்திட்டத்தின்மூலம் தூர்வாரிட அதிகாரிகள் ஒப்புதல் அளித்தனர்.அதன்படி கிராம பொதுமக்களின் உதவியால் கொளக்குடி ஊராட்சி மன்றத்தலைவர் செங்கோடன் சின்னமருது கடந்த சில நாட்களாக தூர்வாரிடும் பணியை ஒருங்கிணைத்து வருகிறார்.இந்த வடிகால் வாய்க்கால் தூர் வாரும் பணியானது மிக நேர்த்தியாகவும், வாய்க்காலில் இருக்கும் முள்செடிகள்,கோரைகள்,தேவையற்ற புற்க்கள் போன்றவை  அகற்றப்பட்டு அழகாகவும் இருக்கிறது.இந்த வாய்ககால் தூர்வாரும்பணியை அப்பகுதியை கடக்கும் யாராக இருந்தாலும் நின்று ஒருநிமிடம் நின்று வேடிக்கை பார்த்து செல்கிறார்கள்.இவ்வாறு சிறப்பாக வாய்க்கால் தூர்வாரும் பணி வேறு எங்கும் பார்க்கமுடியாததாக இருக்கிறது என பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.





இந்நிலையில் இந்த வாய்க்கால் தூர்வாரும்பணியை புவனகிரி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சி.என்.சிவப்பிரகாசம், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சக்தி, பிரேமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.அப்போது சிறப்பாக தூர்வாரும் கொளக்குடி கிராமமக்களுக்கும், ஊராடசி மன்றத்தலைவர்க்கும் தங்களது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.இந்நிகழ்ச்சியின்போது பணித்தள பொறுப்பாளர்கள் அன்பரசன்,வினோதா,செல்வக்குமார் உள்ளிட்டவர்கள் உடனிருந்து ஊராட்சி மன்றத்தலைவர் செங்கோடன் சின்னமருதுவுடன் வாரிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியை ஒருங்கிணைத்து வருகிறார்கள்.