கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த சத்யா. இவர் புவனகிரியில் உள்ள வங்கிக்கு சென்ற போது தனது பல்வேறு ஆவணங்கள் கொண்ட பையை தொலைத்து விட்டார். இதுகுறித்து அவர் புவனகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் அளித்த ஒரு மணி நேரத்தில் புவனகிரி எஸ்ஐ சந்தோஷ் காணாமல்போன பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினார். அப்போது கேட்பாரற்று கிடந்த பையை கண்டெடுத்து ஆய்வுசெய்தனர். அதில் ரூ.75000 மதிப்புள்ள 3 செக், ஒரு டிடி, மற்றும் ஒரு கிராம் மோதிரம், ஆயிரம் ரூபாய் பணம், வங்கி பாஸ் புத்தகம்,பான் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் இருந்தன. அது காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட பெண்ணினுடையது என்பதை உறுதி செய்தபின், அப் பெண்ணிடம் புவனகிரி எஸ் ஐ சந்தோஷ் ஒப்படைத்தார். காணாமல் போன பொருள் ஒரு மணி நேரத்திற்குள் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. போலீசாருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
Thursday, July 9, 2020
புவனகிரியில் முக்கிய ஆவணங்களுடன் காணாமல் போன பையை ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்து போலீசார் உரியவரிடம் ஒப்படைப்பு
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த சத்யா. இவர் புவனகிரியில் உள்ள வங்கிக்கு சென்ற போது தனது பல்வேறு ஆவணங்கள் கொண்ட பையை தொலைத்து விட்டார். இதுகுறித்து அவர் புவனகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் அளித்த ஒரு மணி நேரத்தில் புவனகிரி எஸ்ஐ சந்தோஷ் காணாமல்போன பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினார். அப்போது கேட்பாரற்று கிடந்த பையை கண்டெடுத்து ஆய்வுசெய்தனர். அதில் ரூ.75000 மதிப்புள்ள 3 செக், ஒரு டிடி, மற்றும் ஒரு கிராம் மோதிரம், ஆயிரம் ரூபாய் பணம், வங்கி பாஸ் புத்தகம்,பான் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் இருந்தன. அது காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட பெண்ணினுடையது என்பதை உறுதி செய்தபின், அப் பெண்ணிடம் புவனகிரி எஸ் ஐ சந்தோஷ் ஒப்படைத்தார். காணாமல் போன பொருள் ஒரு மணி நேரத்திற்குள் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. போலீசாருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த இருபதாண்டுகளுக்கும்மேலாக செயல்பட்டு வருகிறது.சேத்தியாத்தோப்பு,...
-
சேத்தியாத்தோப்பு அருகே வலசக்காடு கிராமத்தில் ஆழ்துளை கிணற்றை மூடிய எஸ்ஐக்கு பொதுமக்கள் பாராட்டு.தமிழகத்தில் மீண்டும் ஒரு துயரமான ஆழ்து...