உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Wednesday, July 8, 2020

செய்தி எதிரொலி மின்வாரிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் நன்றி




கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கீழ்புவனகிரியில் பரபரப்பான சாலையில் அதிக மின்னழுத்த மின்கம்பம் பழுதடைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.இந்நிலையில் இதனை புதியதாக மாற்றியமைக்க அமைக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர்.இதனையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற மின்வாரிய அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் அந்த பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பத்தை அமைத்தனர்.இப்பகுதியில் புதிய மின்கம்பம் பொறுத்தப்பட்டதால் பின்னாளில் ஏற்படவிருந்த அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன என்று தெரிவித்த பொதுமக்கள் உடனடியாக சரிசெய்த மின்வாரிய அதிகாரிகளுக்கு தங்களது நன்றியை¬யும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.