கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் புதிய பாலம் உள்ளது.இப்பாலத்தில் தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.பழமை வாய்ந்த பழைய பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக புதியபாலத்தில் அனைத்து போக்குவரத்தும் நடைபெற்று வருகிறது.இந்த புதிய பாலம் வடமாவட்டங்களையும் ,தென்மாவட்டங்களையும் இணைக்கும் முக்கிய பாலமாகவும் இருந்து வருகிறது.சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் இப்பாலம் தற்போது ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ எனும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.அதற்கு காரணம் பாலத்தின் அடியில் உள்ள பில்லர்கள் இருக்கும்பகுதி மண்அரிப்பு ஏற்பட்டுள்ளது.இந்த மண்அரிப்பால் பாலத்திற்கு ஆபத்து ஏற்படும் சூழல் இருப்பதாக தெரிவிக்கும் இப்பகுதியினர் சேத்தியாத்தோப்பு புதிய பாலத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவேண்டும்.பாலத்தின் அடியில் ஏற்பட்டுள்ள மண்அரிப்பை தடுத்து எதிர்காலத்தில் இதுபோன்று ஏற்படாதவாறு தடுக்கவேண்டும்.காரணம் வெள்ளாற்றி வெள்ளத்தின்போது அதிக தண்ணீர் வெளியேற்றும் நிலையில் அந்த தண்ணீர் புதிய பாலத்தின் பில்லர்களை மோதித்தான் செல்கின்றன.அப்போது பாலத்தின் பில்லர்கள் பகுதியில் இருக்கும் மண் மெல்ல மெல்ல அடித்துசெல்லப்படுகிறது.இது தொடர்ந்து நடைபெற்று வந்ததால் தற்போது மிக ஆபத்து ஏற்படுத்தும்விதமாக மண்அரிப்பு ஏற்பட்டுள்ளது.இதனை சரிசெய்யும் அதிகாரிகள் புதிய பாலத்தில் மின்விளக்கு வசதியையும் ஏற்படுத்தி தரவேண்டும் என இப்பகுதியினர் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
Wednesday, July 8, 2020
புதிய பாலத்தின் அடிப்பகுதியில் மண் அரிப்பை சரிசெய்ய கோரிக்கை

-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...