உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Tuesday, July 14, 2020

மூடப்பட்ட துணை சுகாதார நிலையம் திறக்க கோரிக்கை


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது வடதலைக்குளம் கிராமம்.இக்கிராமத்தில் தென்தலைக்குளம் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது.இந்த துணை சுகாதார நிலையத்தின் மூலம் வடதலைக்குளம்,தென் தலைக்குளம்,உளுத்தூர்,பிரசன்னராமாபுரம், அம்பாள்புரம்,உடையூர்,கொளக்குடி,மருதூர்,ஜெயங்கொண்டான் உள்ளிட்ட 5ஆயிரத்திற்கு மேற்பட்ட கிராமமக்கள் பயன்பெற்று வந்தனர்.இங்கு முதலுதவி சிகிச்சைகள்,அவசர கால சிகிச்சைகள்,விஷக்கடி,நாய்கடி,பல்வேறு உடல்நலக்கோளாறுகளுக்கு பரிசோதனைகளும், மருத்துவ ஆலோசனைகளும், மருந்துகளும் வழங்கப்பட்டு வந்தன.இப்பகுதி கிராமமக்களுக்கு மிகவும் பயன்தந்துவந்த துணை சுகாதாரநிலையம் கிராமமக்களின் ஏகோபித்த வரவேற்பையும் பெற்றிருந்தது.கிராமப்புற மக்கள் வெளிநகரங்களுக்கு சென்று தங்களுக்கான மருத்துவ சிகிச்சையை மேற்கொள்வதற்கு உள்ள சிரமத்தை குறைக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் இந்த துணை சுகாதார நிலையம் ஏற்படுத்தப்பட்டது.ஆனால் அதிகாரிகள் சில மாதங்கள் வரை முழுமையாக இங்கு துணை சுகாதார நிலையத்தை செயல்படுத்தாமல் பொதுமக்கள் யாரும் சிகிச்கைக்கு வரவில்லை என்று கூறி இந்த துணைசுகாதார நிலையத்தை பயன்பாட்டுக்கு இல்லாமல் செய்துவிட்டதாக இப்பகுதி கிராமமக்கள் தெரிவித்து வருகிறார்கள்.தற்போது இக்கட்டான காலக்கட்டத்தில் இங்குள்ள கிராமமக்கள் இருந்து வருவதால் மீண்டும் இந்த துணை சுகாதார நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.நிரந்தரமாக இந்த சுகாதார நிலையம் செயல்படவேண்டும் என இப்பகுதியினை சேர்ந்த ஐந்தாயிரத்திற்குமேற்பட்ட பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.