உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Tuesday, July 14, 2020

வீராணம் ஏரி மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்க முயல்பவர்களின்மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை




கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது வீராணம் ஏரி.மிகப்பெரிய ஏரி.விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கிறது.இதனுடன் இப்பகுதியில் உள்ள ஆறாயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்களையும் வாழ வைத்துக்கொண்டிருக்கும் ஏரி.சேத்தியாத்தோப்பு,குமாரக்குடி,புடையூர்,சித்தமல்லி, கருணாகரநல்லூர்,வானமாதேவி,நத்தமலை, கந்தகுமாரன்,கலியமலை,லால்பேட்டை,காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் தினசரி ஏரியில் மீன்பிடிப்பதையே முக்கியத்தொழிலாக செய்து வருகிறார்கள்.ஏரியில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு தினசரி அவர்கள் மீன்பிடித்தாலும்,மீன்கள் கிடைப்பதில்லை.அதிலும் இரண்டுமூன்று நாட்களுக்கு பிறகுதான் கொஞ்சம் மீன்கள் கிடைக்கின்றன.அவ்வாறு கிடைக்கும் மீன்களை வியாபாரிகளிடம் அல்லது பொதுமக்களிடம் விற்று அதில் இருநூறு அல்லது நானூறு ரூபாய் பணத்த்தில் தங்களது குடும்பத்திற்கு தேவையானவற்றை மீனவர்கள் வாங்கிச்செல்கிறார்கள்.நன்றாக கவனிக்கவும் மீனவர்கள் தினசரி ஏரியில் இறங்கி மீன்பிடித்தாலும் அவர்களுக்கு இரண்டுமூன்று நாட்களுக்கு பிறகுதான் சொற்பஅளவில் மீன்கள் கிடைத்து வருகின்றன.இவ்வாறு மிகவும் கடினமான நிலையில் வாழ்க்கை நடத்தி வரும் நிலையில் மீனவர்களிடம் சிலர் சென்று தங்களுக்கு ஏதாவது மீன் அல்லது, பணம் கொடுத்தால்தான் உங்களை மீன்பிடிக்க விடுவோம்.அல்லது எங்களுக்கு எதுவும் கொடுக்கவில்லை எனில் உங்கள் மீன்களை யாரும் வாங்காத வகையில் செய்வோம்.உங்களை ஏரியில் மீன்பிடிக்கவிடாமலும் துரத்திவிடுவோம் என்று  மிரட்டி வருவதாக இப்பகுதி மீனவர்கள் வேதனையுடன் தெரிவிக்கிறார்கள்.கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக மீன்பிடித்து வாழ்ந்து வரும் தங்களுக்கு இதுபோன்று இப்படிப்பட்ட பிரச்னைகள் எதுவும் வரவில்லை.ஆனால் சிலர் தற்போது நாங்கள் கஷ்டப்பட்டு பிடிக்கும் மீன்களில் பங்கு அல்லது பணம் கேட்பது வேதனையாக இருக்கிறது.இதனை அதிகாரிகள் கவனித்து தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.எவ்விதமான சிக்கலும் இல்லாமல் சுதந்திரமாக வீராணம் ஏரியில் மீன்பிடிக்க அனுமதிக்கவும் வேண்டும் எனவும் வீராணம் ஏரியை நம்பியுள்ள ஆறாயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் கண்ணீரோடு அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள்.