உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Tuesday, July 14, 2020

புவனகிரி பகுதியில் மருத்துவ குணம் கொண்ட சிறு பாகற்க்காய் அறுவடை தீவிரம்






கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ளது தெற்குதிட்டை கிராமம்.இக்கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் மிதி பாகற்க்காய் சாகுபடி செய்துள்ளனர்.மருத்துவ குணம் நிறைந்த இந்த பாகற்க்காய் அதிகலாபமும் இவர்களுக்கு தருகிறது.இக்கிராமம் மட்டும் அல்லாமல் இக்கிராமத்தினை சுற்றியுள்ள ஆலம்பாடி,பூதவராயன்பேட்டை, வத்தராயன்தெத்து உள்ளிட்ட முப்பதுக்குமேற்பட்ட கிராமங்களில் மிதி பாகற்க்காய் சாகுபடி செய்கிறார்கள்.சம்பா அறுவடைக்கு பிறகு உள்ள வயலில் பாகற்க்காயை விதைப்பு செய்கிறார்கள்.பாரம்பரிய முறைப்படி கடந்த ஐம்பதாண்டுகளுக்கு மேலாக இப்பகுதி விவசாயிகள் இதனை முக்கிய பயிராக பயிர்செய்து வருகிறார்கள். விதைப்பு செய்த முதல் மாதத்திலிருந்து மூன்றாவது மாதத்தில் அறுவடைக்கு தயாராகிறது மிதி பாகற்க்காய்.தொடர்ச்சியாக ஆறுமாதம் வரை அறுவடை செய்யலாம்.
ஒரு ஏக்கரில் குறைந்தப்பட்சம் ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை லாபம் தருகிறது. நெல்லைவிட அதிக லாபம் தருவதால் இதனை அனைவரும் விரும்பி பயிர்செய்து வருகிறார்கள்.மருத்துவக்குணம் நிறைந்த இந்த பாகற்க்காய் சர்க்கரை நோய், ரத்தம் சுத்திகரித்தல் உள்ளிட்ட பல்வேறு உடல்கோளாறுகளுக்கு மருந்தாக இருக்கிறது.இதனை எங்கு பார்த்தாலும், யாராக இருந்தாலும் விரும்பி வாங்கிச்செல்கிறார்கள். அனைவரின் உணவிலும் முக்கிய இடம்பிடித்துள்ளது இது.இப்பகுதியில் விளையும் பாகற்க்காயை தமிழகத்தின் பல இடங்களுக்கும் விற்பனைக்கு வியாபாரிகள் வாங்கிச்செல்கிறார்கள்.கிலோ நாற்பதுரூபாயிலிருந்து ஐம்பது ரூபாய் வரை விற்பனையாகிறது.மேலும் இப்பகுதியில் இருக்கும் பலரும் விவசாயிகளிடமிருந்து வாங்கி இதனை சாலையோரம் வைத்து விற்பனை செய்கிறார்கள்.





இதில் முக்கியமான விஷயம் விவசாயிகளே பாரம்பர்யமாக விதைகளை தயார்செய்து ஒருவருக்கொருவர் உதவிக்கொள்கிறார்கள்.அதனால் பாகற்க்காய் இயற்கையான குணத்தோடு விளைகிறது.தற்போதைய கொரானோ காலத்தில் இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் மிதி பாகற்க்காய் கடவுள் தந்த வரமாக உள்ளது என்பதே உண்மை. நமது விவசாய முறையில் நாம் படும் கடுமையான சிரமங்களுக்கு மத்தியில் சொற்ப லாபமே பெறுகிறோம்.அல்லது நஷ்டம் அடைகிறோம் என்பதே உண்மை.நமது விவசாயிகளிடத்தில் உள்ள முக்கிய சிக்கலானது அவர்கள் தாங்கள் எத்தனைக்காலம் வழக்கமான விவசாயம் செய்து வந்தார்களோ அதற்குதான் அக்கரை செலுத்துகிறார்கள்.காலம் மாறுவதற்கு ஏற்ப அவர்களின் சுற்றுப்புறம் மாறிக்கொண்டுள்ளது.ஆனால் அவர்கள் மனதளவில் மாறாமல் அதே பழைய நடைமுறையில்தான் செயல்படுவார்கள்.இதற்கு உதாரணம் சொல்வதென்றால் புவனகிரி,கீரப்பாளையம், சேத்தியாத்தோப்பு,சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெல் மட்டும் அதிகம் பயிரிடப்படுகிறது.நெல் நமக்கு உணவைத்தருகிறது நல்ல விஷயம்தான்.ஆனால் அனைவரும் ஒரே முறையில் நெல் மட்டுமே விளைவிப்பதால் இதற்கு அறுவடைக்கு பிந்தைய விலை கிடைக்காமல் விவசாயிகள் வேதனையடைகிறார்கள்.இதுவே விவசாயிகள் காலச்சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு நெல் பயிரோடு மாற்றுப்பயிர்களையும் பயிர்செய்வதற்கு முன்வரவேண்டும்.இப்படி செய்தால் இவர்களுக்கு தங்களுக்கு தேவையான உணவு கிடைப்பதோடு , வாழ்க்கைக்கு தேவையான பொருளாதாரமும் போதுமான அளவு கிடைக்கும்.இன்றையக்காலக்கட்டத்தில் விவசாயிகள் மாற்றுமுறை விவசாயம், அல்லது எளிதில் வருமானம் கிடைக்கும் விவசாயம் போன்றவற்றை செய்யவேண்டும்.இதற்கு நல்ல உதாரணம் சொல்வதென்றால் புவனகிரி பகுதியில் தற்போது மிதி பாகற்க்காய் எனப்படும் சிறு பாகற்க்காய் சாகுபடியை சொல்லலாம்.இதனால் இதனை பயிரிட்டுள்ள விவசாயிகள் எந்தக்குறையும் இல்லாமல், முக்கியமாக எவ்விதமான புலம்பலும் இல்லாமல் எங்களுக்கு இந்த பாகற்க்காய் சாகுடியில் நெல்லைவிட அதிக வருமானம் கிடைக்கிறது.இப்பகுதியில் இருநூறு ஏக்கருக்குமேல் பலரும் பயிர்செய்துள்ளோம் என்கிறார்கள்.அவர்கள் கூறும்போது பாகற்க்காயை பொறுத்தவரை எத்தனை விவசாயிகள் அதனை விளைவித்தாலும் மக்களிடத்தில் எல்லாக்காலத்திலும் அதற்கு சிறப்பான வரவேற்பு இருக்கிறது.ஏன்? பாகற்காய் முக்கிய உணவுபொருளாக இருக்கிறது.இதனை சிலர் ஒதுக்கினாலும் 99 சதம் மனிதர்கள் தங்களது உடல்நலனை சரியாக பராமரிக்க உணவில் எப்போதும் பாகற்காயை சேர்த்து வருகிறார்கள்.அதனால் இவ்வகை பாகற்காய்களை எத்தனை விவசாயிகள் பயிரிட்டாலும் அத்தனைக்கும் சரியான நல்ல லாபமான விலை கிடைக்கும் என்பது கண்கூடான உண்மை.இது ஒரு எடுத்துக்காட்டுதான்.ஒவ்வொரு விவசாயிகளும் தங்களை மாற்றிக்கொள்ளாதவரை விவசாயத்தில் முன்னேற்றம் மற்றும் லாபம் என்பது இல்லை என்பதை அனுபவ விவசாயிகள் தெளிவாக கூறுகிறார்கள்.