உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Thursday, July 16, 2020

கீரப்பாளையம் வட்டாரத்தில் பயிர்காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு



கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் வட்டாரத்தில் பத்தாயிரம் ஏக்கருக்கு மேல் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.பாரதபிரதமரின் பயிர் காப்பீட்டுத்திட்டத்தின்படி குறுவை பருவத்தில் நெல் நடவு செய்துள்ள விவசாயிகள் இயற்கை இடற்பாடுகளை கருத்தில்கொண்டு உடனடியாக பயிர்காப்பீடுசெய்ய  கீரப்பாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராஜராஜன் அறிவுறுத்தி வருகிறார்.அதன்படி கடலூர் மாவட்டத்தில் பயிர்காப்பீடு செய்ய ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிட் மூலம் பயிர்காப்பீடு செய்யப்படுகிறது.தற்போதைய குறுவை சாகுபடிக்கான காப்பீட்டுத்தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.31,300ஆகும். இதில் இரண்டு சதவீத தொகை அதாவது ஏக்கருக்கு ரூ.626 ரூபாயை பிரிமியத்தொகையாக செலுத்திடவேண்டும்.இதற்கு விவசாயிகள் ஆதார் அட்டை, பட்டா,சிட்டா,அடங்கல்,வங்கிகணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களை அவசியம் தவறாமல் எடுத்துச்சென்று அருகிலுள்ள பொதுசேவை மையம், கூட்டுறவு வங்கி, தேசியமயமாக்கபட்ட வங்கிகளில் பயிர்காப்பீடு செய்துகொள்ள செய்திக்குறிப்பில் அறிவுறுத்தியிருக்கிறார்.